எந்த அடிப்படையுமின்றி ஊடகவியலாளர் வி. அன்பழகன் மீது 2017 மற்றும் 2018 ஆண்டுகளில் மாநில காவல்துறை பதிவு செய்த 26 பணப்பறிப்பு வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்குகளை ரத்து செய்த கோரி வி. அன்பழகன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
”குற்றத்தை நிருபிக்கும் வகையில் எந்த ஒரு ஆதாரமும் இல்லை. வழக்குகளை பதிவு செய்வதில் காவல்துறையினர் மெத்தனமாகவும், தவறாகவும் நடந்து கொண்டுள்ளனர்” என நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது.
மனுவை விசாரித்த நீதிபதி எம். தண்டாயுதபாணி, “குற்றம்சாட்டப்பட்டிருக்கும் ஊடகவியலாளர் வி. அன்பழகன் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் சில ஊழல் நடவடிக்கைகளை அம்பலப்படுத்தில் இருந்து, அதிகாரத்தில் இருப்பவர்களால் அவர்மீது சென்னை, கோவை மற்றும் பிற இடங்களில் தொடர்ந்து வழக்கு பதிந்ததாக தெரிகிறது.” என தெரிவித்துள்ளார்.
ஸ்டான் சாமிக்காக இடது சாரிகள் நடத்தும் போராட்டத்தில் விசிக பங்கேற்கும் – திருமாவளவன்
”அவதூறான கட்டுரைகளை வெளியிடுவதாக மிரட்டிப் பணம் பறித்தார் என்பது தான், மனுதாரர் மீது தாக்கல் செய்யப்பட்ட ஒரே மாதிரியான புகார்களின் அடிப்படை குற்றச்சாட்டு. ஆனால் அவர் பேசிய தொலைபேசி எண்ணையோ அல்லது வாட்ஸ் அப் செய்திகளையோ புகார்தார்களால் சமர்பிக்க முடியவில்லை” என அவர் குறிப்பிட்டார்.
”விசாரணை முழுமையாக முடிந்துவிட்டதாக கூறும் காவல்துறையால் ஒரு ஆதாரத்தை கூட சமர்பிக்கவில்லை. உண்மையில் அவர்கள் அதிகாரத்தில் இருந்த தனிநபர்களின் விருப்பத்திற்கேற்ப செயல்பட்டுள்ளனர்” என நீதிபதி அந்த உத்தரவில் தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.