சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய தற்காலிக தூய்மை மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி மூன்றாம் நாளாக வேலைநிறுத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தங்களின் கோரிக்கையை அமைச்சர் கே.என்.நேரு நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்டிருக்கும் பத்திரிகை செய்தியில், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில் பணி நிரந்தரம் என்கின்ற ஒற்றை கோரிக்கைக்காக 16.05.2022 அன்று தொடங்கப்பட்ட எங்களது வேலைநிறுத்தப் போராட்டம், மூன்றாவது நாளாக இன்றும் தொடர்கிறது.
200 குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தைச் (CMWSSB depot) சேர்ந்த 700க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்து, CMWSSB இன் தலைமை அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் மேற்கொண்டு வருகிறோம்.
16.5.2022 அன்று காவல்துறையினரின் வழியாக நடந்த இரண்டு பேசவார்தைகளின் முடிவுகள் மற்றும் நிர்வாகத்தின் மிரட்டல் தொனி எங்களுக்கு ஏற்புடையதாக இல்லாததால், அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைக்கு வழி அற்று போனது.
நேற்று 17.05.2022 பாராளமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் அவர்கள் களத்திற்கு வருகை தந்து போராட்டத்தை ஆதரித்தார். மேலும் இன்று 18-5-22 முதல்வர் மற்றும் அமைச்சர் கே. என்.நேரு ஆகியோரை சந்தித்து எங்களது கோரிக்கைகளை முன் வைப்பதாக உறுதி அளித்துச் சென்றார்.
எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் என்ற உறுதியுடன் மூன்றாவது நாளாக இன்றும் போராட்டக் களத்தில் அமர்ந்துள்ளோம்.
அனைத்து பிரிவு ஆதரவு சக்திகளையும், அரசியல்-மக்கள் பிரதிநிதிகளையும், சாதி ஒழிப்பு – உழைப்புச் சுரண்டல் ஒழிப்பின் மீது பற்று கொண்டோரையும், சமூகநீதியின் பால் எங்களோடு தோள் சேர்த்து துணை நிற்குமாறு அழைக்கிறோம் என்று சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய தற்காலிக தூய்மை மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் விடுத்த பத்திரிகை செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேரறிவாளன் விடுதலை தமிழர்களுக்கு திருவிழா Pasumpon Pandian
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.