நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குறிய விதத்தில் எழுதிய ஜெயந்தன் என்பவரை கட்சியின்அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் நீக்கியுள்ளனர்.
முன்னதாக, முகமது நபி குறித்து பாஜகவின் (முன்னாள்) தேசிய செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா அவதூறான கருத்து தெரிவித்திருந்தார். இதற்குப் பல பல வளைகுடா நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதன் பிறகு அவர் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக பாஜக கட்சி மேலிடம் தெரிவித்தது.
கியான்வாபி மசூதி விவகாரம்: ஆர்எஸ்எஸ் எனும் சாத்தான் வேதம் ஓதுகிறது
மேலும், பாஜகவின் டெல்லி மாநில ஊடக பிரிவுத் தலைவர் நவீன் ஜிண்டால், நபிகள் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்து, பின்னர் நீக்கினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் மற்றும் ஆர்பாட்டங்கள் நடைபெற்றன. பின்னர் அவரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
உலக நாடுகளின் கண்டனங்களைத் தொடர்ந்து, அனைத்து மதங்களையும் மதிப்பதாகவும், எந்த ஒரு மதத்தையோ ஆளுமைகளையோ அவமதிப்பதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் பாஜக அறிக்கையை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் எழுதிய பாமக கட்சியைச் சேர்ந்த ஜெயந்தன் என்பவரை கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த உடையாளூரைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னான் ஒன்றிய நிர்வாகி ஜெயந்தன் என்கிற ஜேம்ஸ் என்பவர் பாட்டாளி மக்கள் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஒழுங்கினமான செயல்களில் ஈடுபட்டு வருவதால். இன்று (10.06.2022) வெள்ளிக்கிழமை முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அப்பா அவர்களின் ஒப்புத்துடன் நிக்கப்படுகிறார். அவருடன் பாட்டாளி மக்கள் கட்சியிணி எந்த வகையிலும் தொடர்பு வைத்துக் கொள்ள போண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் என்று பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
யாரை மிரட்டுகிறார் ஜக்கி கம்பி எண்றதுதான் பாக்கி | Surya Xavier Interview | Aransei
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.