தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகளில் தமிழ்வழியில் பயிலும் மாணவர்கள் 61 விழுக்காடு என்றும், ஆங்கில வழியில் பயிலும் மாணவர்கள் 35 விழுக்காடு என்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விகளின் வாயிலாக தெரிய வந்துள்ளது.
நாசர் முகமது முகைதீன் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது.
அதில், தமிழ்நாட்டில் மொத்தம் 29413 அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அதில் 12,34,426 மாணவர்களும், 11,78,386 மாணவர்களும் படித்து வருகின்றனர். அதில் 14,73,153 மாணவர்கள் தமிழ் வழிக் கல்வியிலும், 8,45,348 மாணவர்கள் ஆங்கில வழிக் கல்வியிலும் படித்து வருகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள 29 அரசுப் பள்ளிகளில் மொத்தம் 26, 330 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். அதில், 9,527 மாணவர்களும், 16,803 மாணவிகளும் அடக்கம். இதில், 1891 மாணவர்கள் தமிழ்வழி கல்வியிலும், 7636 மாணவர்கள் ஆங்கிலவழி கல்வியிலும் படிக்கின்றனர். 2342 மாணவிகள் தமிழ்வழி கல்வியிலும், 14,461 மாணவிகள் ஆங்கிலவழி கல்வியிலும் படிக்கின்றனர் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது சென்னையில் உள்ள அரசுப்பள்ளிகளில் தமிழ்வழியில் பயிலும் மாணவர்கள் 16 விழுக்காடு ஆகவும் ஆங்கில வழியில் படிக்கும் படிக்கும் மாணவர்கள் 84 விழுக்காடு ஆகவும் உள்ளது.
பாஜகவின் கலவரபுத்தி எப்பவுமே மாறாது Dr Sharmila Interview
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.