Aran Sei

காஷ்மீர் விவகாரத்தில் ஒன்றிய அரசின் கொள்கை தோல்வியடைந்துள்ளது – ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முஃப்தி

காஷ்மீர் விவகாரத்தில் ஒன்றிய அரசின் கொள்கை தோல்வியடைந்து விட்டது என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும் மக்கள் ஜனநாயக் கட்சியின் தலைவருமான மெகபூபா முஃப்தி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த அவர், ”குப்கார் கூட்டணியைக் கண்டு ஒன்றிய அரசு பயப்படுகிறது. ஏனெனில், நாம் (எதிர்கட்சிகள்) ஒன்று சேர்ந்தால் அவர்களின் மோசமான திட்டம் தோல்வியடையும். காஷ்மீரில் ஒன்றிய அரசின் கொள்கை தோல்வியடைந்துள்ளது. அவர்கள் மீண்டும் அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் முஃபதி முகமது சயீத் கொள்கைக்குத் திரும்ப வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

காஷ்மீரி பண்டிட் அரசு ஊழியர் ராகுல் பட் இறந்த சில நாட்களுக்குப் பிறகு, காஷ்மீரில் வன்முறை வெடிப்பதற்கு விவேக் அக்னிஹோத்ரியின் ”தி காஷ்மீர் பைல்ஸ்” திரைப்படம் தான் காரணம் என்று மெகபூபா முஃப்தி தெரிவித்துள்ளார்.

”நான் பதவியில் இருந்த காலத்தில் காஷ்மீர் பண்டிட்களுக்கு பாதுகாப்பான சூழல் நிலவியது. 2016-ம் ஆண்டு உச்சகட்ட கலவரத்தின்போது எந்த கொலையும் நடக்கவில்லை. தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் வன்முறையைத் தூண்டியுள்ளது.” என்று மெகபூபா முஃப்தி கூறியுள்ளார்.

Source: NDTV

Defamation Case போட்டு Annamalai ய Court க்கு இழுக்கனும் Vanchi Nathan

காஷ்மீர் விவகாரத்தில் ஒன்றிய அரசின் கொள்கை தோல்வியடைந்துள்ளது – ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முஃப்தி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்