Aran Sei

காஷ்மீர்: குறிவைக்கப்பட்ட தாக்குதல்களை கையாள ஒன்றிய அரசு பயன்படத்திய திட்டம் தோல்வி – சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல்

காஷ்மீரில் பண்டிட்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்மீதான குறிவைக்கப்பட்ட தாக்குதலைக் கையாள ஒன்றிய அரசு பயன்படுத்திய திட்டம் தோல்வியடைந்து விட்டது என்று சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளார்.

முன்பு காஷ்மீரி பண்டிட்கள் மற்றும் கொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது புலம்பெயர்ந்த இந்துக்களும் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டு வருகின்றனர் என்று அவர் கூறியுள்ளார்.

”முன்பு காஷ்மீர் பண்டிட்கள் கொல்லப்பட்டனர், இப்போது இந்துக்கள் (புலம்பெயர்ந்தவர்கள்) கொல்லப்படுகிறார்கள். நீங்கள் (ஒன்றிய அரசு) எந்த மூலோபாயத்தைக் கையாண்டாலும், அதற்குப் பிறகும் பிரச்சினை இன்னும் உள்ளது. சிக்கலைத் தீர்க்கப் பயன்படுத்தப்பட்ட முறை தோல்வியடைந்துள்ளது, “என்று அவர் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர்: பண்டிட்கள் மீதான தொடர் தாக்குதல் – இஸ்லாமியத் தலைவர்கள், சிவில் உரிமைகள் அமைப்பு கண்டனம் 

காஷ்மீரில் அப்பாவி பொதுமக்கள் இலக்கு வைத்து கொல்லப்படுகிறார்கள், பாதிக்கப்பட்டவர்களில் காஷ்மீர் பண்டிட் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அடங்குவர்.

ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் ராஜஸ்தானைச் சேர்ந்த வங்கி மேலாளர் விஜய் குமார், அவரது அலுவலகத்திற்கு வெளியே பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இடமாறுதல் கோரிக்கையை ஏற்க மறுத்த ஒன்றிய அரசு – காஷ்மீர் பள்ளதாக்கை விட்டு வெளியேறும் பண்டிட்கள்

இந்த வார தொடக்கத்தில் ஜம்முவின் சம்பா மாவட்டத்தைச் சேர்ந்த 36 வயதான பெண் ஆசிரியை ரஜ்னி பாலா குல்காமின் கோபால்போராவில் உள்ள ஒரு அரசு பள்ளியில் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு குறித்து துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா மற்றும் பிற உயர் அதிகாரிகளுடன் ஒன்றிய அரசின்  உள்துறை அமைச்சர் அமித் ஷா மே 3 தேதி  ஆலோசனை நடத்தினார். அதில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ஜம்மு-காஷ்மீர் காவல்துறை தலைமை இயக்குநர் தில்பாக் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Source: NDTV

பாமக தொண்டர்களை பாஜகவில் அடகு வைத்த Dr Ramadoss | CN Ramamurthy Interview | PMK Cadres Shift to BJP

 

காஷ்மீர்: குறிவைக்கப்பட்ட தாக்குதல்களை கையாள ஒன்றிய அரசு பயன்படத்திய திட்டம் தோல்வி – சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்