சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது என்பது தொடர்பான நிலைப்பாட்டை ஒன்றிய அரசு மாற்றியுள்ளது.
மார்ச் 25 தேதி உச்சநீதிமன்றத்தில் சிறுபான்மை விவகார அமைச்சகம், ஒரு பிரமாண பத்திரத்தில், ”ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சிறுபான்மையினராக அறிவிக்க ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது. மாநில அளவில் சிறுபான்மையினராக மாநில அரசுகளே அறிவிக்கலாம்” என்று தெரிவித்திருந்தது.
”அந்த மாநிலத்திற்குள் ஒரு மத அல்லது மொழியியல் சமூகத்தைச் சிறுபான்மை சமூகமாக மாநில அரசுகளே அறிவிக்கலாம்” என்று அமைச்சகம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், மே 9 தேதி தாக்கல் செய்யப்பட்ட புதிய பிரமாண பத்திரத்தில், சிறுபான்மையினர் என்று அறிவிக்கும் அதிகாரம் ஒன்றிய அரசுக்கு மட்டுமே உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், சிறுபான்மையினர் என்று அறிவிக்கும் முன்பாக மாநில அரசுகள் மற்றும் பிற தரப்பினருடன் பரந்த ஆலோசனையில் ஈடுபடுவோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
”பரந்த ஆலோசனைகள்” எதிர்காலத்தில் இது போன்ற ஒரு முக்கியமான பிரச்னை தொடர்பாக திட்டமிடப்படாத சிக்கல்களை தவிர்க்கும் என்று அமைச்சகம் கூறியுள்ளது.
இதில் பல சமூகவியல் மற்றும் பிற அம்சங்கள் நிரைந்துள்ளது என்று ஒன்றிய அரசு கூறியுள்ளது.
பிரமாணப் பத்திரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள நீதிபதி சஞ்சய் கிஷான் கவுல், “உங்களுடைய முந்தைய நிலைப்பாட்டில் இருந்து முற்றிலும் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்துவிட்டதாக தெரிகிறது. நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதில் உங்களுக்கு ஒரு தெளிவு இல்லை. நிறைய நிச்சையமற்ற நிலை உள்ளது” என்று கூறியுள்ளார்.
நீங்கள் ஆலோசனை செய்ய விரும்பும்பட்சத்தில், யார் உங்களைத் தடுப்பது. பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்யும் முன்பே ஆலோசனைகள் நடத்தியிருக்க வேண்டும். இதை நாங்கள் ஊக்குவிக்கமாட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.
நாடு மத ரீதியாகவும் மொழி ரீதியாகவும் வேறுபட்டு இருப்பதால் ஒன்றிய அரசு ஒரு நிலைப்பாட்டை எடுப்பது அவசியம்.
ஆலோசனை நடத்த ஒன்றிய அரசுக்கு மூன்று மாத கால அவகாசம் வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று வழக்கை ஆக்ஸ்ட் 30 தேதிக்கு ஒத்திவைத்துள்ளது உச்ச நீதிமன்றம்.
Source: The Hindu
Surya Siva திமுகவுக்கு உழைச்ச லட்சணத்த நா சொல்றேன் – கார் ஓட்டுநர் முன்னா இப்ராஹிம் நேர்காணல்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.