அசாமில், 2019 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டில் (என்.ஆர்.சி) பெயர் விடுபட்டவர்களுக்கு ’நிராகரிப்பு சீட்டுகளை’ உடனடியாக வழங்க வேண்டும் என அம்மாநில அரசை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
என்.ஆர்.சி.யில் பதிவிடக் கோரி விண்ணப்பித்த அசாமைச் சேர்ந்த 3.29 கோடி விண்ணப்பதாரர்களில் 19 லட்சம் பேர் இறுதிப் பதிவேட்டில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர்.
அசாம் உள்துறை செயலாளர் எஸ். ஆர். புயானுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய தலைமை பதிவாளர் அலுவலகம் மார்ச் 23 ஆம் தேதி கடிதம் எழுதியிருப்பதாக தி இந்து கூறியுள்ளது.
சூயஸ் கால்வாயில் சிக்கி, போக்குவரத்தை முடக்கிய கப்பல் – ஊழியர்கள் அனைவரும் இந்தியர்கள்
அந்தக் கடிதத்தில், “உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் பெயரில் வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகஸ்ட் 31, 2019 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அந்தப் பட்டியலில் பெயர் விடுபட்டவர்களுக்கு ‘நிராகரப்பு சீட்டு’ வழங்கும் பணிகள் இன்னும் தொடங்கவில்லை” என குறிப்பிடப்பட்டுள்ளதாக, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சகம், “என்.ஆர்.சியில் பெயர் விடுபட்டிருந்தால் அவர்கள் வெளிநாட்டினர் ஆகமாட்டார்கள்”. ஏனெனில் அவர்கள் வெளிநாட்டினர் தீர்ப்பாயத்தில் தங்கள் தரப்பு நியாயத்தை நிருபிக்க போதிய வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது எனத் தெரிவித்திருந்தது. மேலும், வெளிநாட்டினர் தீர்ப்பாயம், அசாம் நீதித்துறை அமைப்புகளில் மேல்முறையீடு செய்யும் கால அவகாசம் 60 நட்களில் இருந்து 120 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
டெல்லி ஆளுனருக்கு அதிகாரம் அளிக்கும் சட்டத்திருத்தம் நிறைவேற்றம் – குடியரசுத்தலைவர் ஒப்புதல்
உச்சநீதிமன்றத்தின் வழிகாடுதலின் பெயரில் அசாம் மாநிலத்தில் மட்டுமே தேசிய குடிமக்கள் பதிவேடு அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக என்.ஆர்.சி ஒருங்கிணப்பு குழு அமைக்கப்பட்டு, ஜனவரி 30, 2020 மற்றும் ஜூலை 2, 2020 தேதிகளில் நடைபெற்ற கூட்டத்தில் இந்தப் பணிகளை, நடப்பு நிதியாண்டிற்குள் முடிப்பதற்கு ரூ 1,602 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது என தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.