Aran Sei

மத்தியப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வெழுத லட்சத் தீவில் தேர்வு மையம் – ஒன்றிய அரசுக்கு சு.வெங்கடேசன் எம்.பி., கண்டனம்

துரை மாணவருக்கு லட்சத்தீவில் தேர்வு மையமா? நுழைவுத்தேர்வுக்கு அலைகடல் தாண்டி பயணப்பட வேண்டுமா? என்று ஒன்றிய அரசுக்கு மக்களவை உறுப்பினர்  சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மத்தியப் பல்கலைக் கழகங்களுக்கான நுழைவுத் தேர்வு ஆகஸ்ட் 30, 2022 அன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நீட் பயிற்சி பெற்ற மாணவர்கள் இருக்கிறார்களே தவிர மருத்துவர்கள் இல்லை – பேராசிரியர் கபீர் சர்தானா

தமிழ்நாட்டில் இருப்பது ஒரு மத்திய பல்கலைக்கழகம். திருவாரூரில்… அதற்கு விண்ணப்பித்த மாணவர் ஒருவருக்கு தேர்வு மையத்திற்கான அனுமதி சீட்டு இரண்டு நாட்களுக்கு முன்புதான் வந்துள்ளது. அவர் மதுரைக்காரர். பிரித்துப் பார்த்த அவரது தந்தைக்கு அதிர்ச்சி. தேர்வு மையம் லட்சத் தீவில்… எப்படி மாணவர் போவார். கப்பலில் அல்லது விமானத்தில்… இப்படி ஒரு வாரம் கூட அவகாசம் தராமல் பயணத்திற்கு டிக்கெட் வாங்குவது என்றால் எவ்வளவு செலவு. விமானத்திற்கு நாளுக்கு நாள் கட்டணம் ஏறும். இதில் அனுமதிச் சீட்டோடு வந்துள்ள அறிவுரை சீட்டில் ஒரு நாள் முன்பாகவே வந்து மையத்தைப் பார்த்துக் கொள்ளுங்க என்று ஆலோசனை வேறு.

மாணவரின் தந்தை பதறிப் போய் வந்தார். இவரைப் போல எத்தனை மாணவர்களோ, பெற்றோர்களோ… ஏழை, நடுத்தர குடும்பங்கள் என்ன செய்யும்? மன உளைச்சல்… பணத்திற்கும் அலைச்சல்…

ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தற்கு எதிரான மனுக்களை விசாரிக்காமலே உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா ஓய்வு பெற்றுள்ளார் – உமர் அப்துல்லா

உயர் கல்வி செயலாளருக்குக் கடிதம் எழுதியுள்ளேன். இது போன்ற மாணவர்களுக்கு மையத்தை மாற்றுங்கள் என்று… தேர்ச்சி பெறுவதை விட தேர்வு மையத்துக்குச் சென்று சேர்வது கடினம் என்ற நிலையை உருவாக்காதீர்கள் என்று மக்களவை உறுப்பினர்  சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

Ranjith Film on KGF exclusive Update I Natchathiram Nagargiradhu I DOP Kishor Kumar Interview

மத்தியப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வெழுத லட்சத் தீவில் தேர்வு மையம் – ஒன்றிய அரசுக்கு சு.வெங்கடேசன் எம்.பி., கண்டனம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்