Aran Sei

‘தமிழ்நாட்டை பிரித்து புதிய மாநிலம் உருவாக்கும் திட்டமில்லை’ – மக்களவையில் ஒன்றிய அரசு தகவல்

மிழ்நாடு உள்ளிட்ட எந்த மாநிலத்தையும் பிரித்து புதிய மாநிலங்களை உருவாக்குவதற்கான எந்தக் கோரிக்கையும் தற்போது பரிசீலனையில் இல்லை என்று மக்களவையில் ஒன்றிய அரசின் உள்துறை இணையமைச்சர் நித்யானந் ராய் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, தமிழ்நாட்டை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எஸ்.ராமலிங்கம், பாரிவேந்தர் ஆகியோர் இணைந்து, “தமிழ்நாடு உள்ளிட்ட எந்த மாநிலத்தையாவது பிரித்து, புதிய மாநிலங்களை உருவாக்குவதற்கான யோசனை ஒன்றிய அரசுக்கு உள்ளதா? அப்படி இருக்கிறது என்றால், அக்கோரிக்கைகளுக்கான காரணங்கள், தேவைகள் போன்றவை என்ன? ஏதேனும் தனி நபரோ அல்லது தனி அமைப்போ, தமிழ்நாடு உள்ளிட்ட எந்த மாநிலத்தையாவது பிரித்து, புதிய மாநிலங்களை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஒன்றிய அரசுக்கு வைத்துள்ளதா? அப்படி வைத்துள்ளது என்றால், எப்போது வைக்கப்பட்டுள்ளது?” என்று எழுத்துபூர்வமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

கொங்குநாடு விவகாரம் : ‘நன்றாக இருக்கும் தமிழ்நாட்டை ஏன் பிரிக்க வேண்டும்?’ – வடிவேலு கேள்வி

அதற்கு பதிலளித்துள்ள நித்யானந் ராய், “புதிய மாநிலங்களை உருவாக்க கோரி பல்வேறு நபர்கள் மற்றும் அமைப்புகளிடமிருந்து கோரிக்கைகள் அவ்வப்போது பெறப்படுகின்றன. ஒரு புதிய மாநிலத்தை உருவாக்குவது என்பது பரந்தப்பட்ட தாக்கங்களையும், நம் நாட்டின் கூட்டாட்சி மீது நேரடி தாக்கத்தையும் உண்டாக்கக்கூடியது. ஒரு புதிய மாநிலத்தை உருவாக்குவதற்கான அனைத்து பொருத்தமான காரணங்களையும் கருத்தில் கொண்ட பிறகு, புதிய மாநிலங்களை அரசு உருவாக்கும். தற்போது புதிய மாநிலத்தை உருவாக்கும் திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை.” என்று பதிலளித்துள்ளார்.

அண்மையில், ஒன்றிய இணையமைச்சராக பதவியேற்ற எல். முருகனின் சுய விவரக் குறிப்பில் கொங்குநாடு என்ற வார்த்தை இடம்பெற்றிருந்ததை அடுத்து, அது தொடர்பாக தமிழ்நாட்டில் சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.

‘தமிழ்நாட்டை பிரித்து புதிய மாநிலம் உருவாக்கும் திட்டமில்லை’ – மக்களவையில் ஒன்றிய அரசு தகவல்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்