பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கேள்விகளை எழுப்பியுள்ளது.
மேலும், வழக்கு தொடர்பான வாதங்கள் முடிவடைந்த நிலையில், தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலைக்கு காரணமானவர்கள் என்று கைது செய்யப்பட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் கடந்த 30 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி பேரறிவாளன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. முதற்கட்டமாக மே 4 தேதி மனு விசாரணைக்கு வந்தபோது, பேரறிவாளனை விடுதலை செய்வதில் ஒன்றிய அரசுக்கு என்ன பிரச்னை என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.
மேலும், மே 10 தேதிக்குள் ஒன்றிய அரசு முடிவெடுக்காவிட்டால் நாங்களே முடிவெடுப்போம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இதற்குப் பதிலளித்த ஒன்றிய அரசின் நீதிபதி நட்ராஜ், பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநர் முடிவெடுப்பது தொடர்பாக குடியரசு தலைவர் முடிவெடுக்கவுள்ளார் என்று கூறினார்.
இது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என தெரிவித்த நீதிபதிகள் வழக்கை இன்றைய தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இன்று மதியம் வழக்கின் விசாரணை தொடங்கப்பட்டபோது, இந்திய அரசியலமைப்பின்படி ஒன்றிய அரசுக்கு உள்ள அதிகாரம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகளை காட்டி ஒன்றிய அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநர் காலம் தாழ்த்தியதை ஏற்க முடியாது – உச்சநீதிமன்றம்
“மாநில அரசுகளின் விசாரணை அமைப்புகளின் வரம்பிற்குள் வரும் வழக்குகளில் மட்டுமே மாநில அரசு முடிவெடுக்கலாம். பேரறிவாளன் வழக்கு ஒன்றிய அரசின் புலனாய்வு அமைப்புகளின் கீழ் வருவதால் மாநில அரசு முடிவெடுக்க முடியாது. பொதுவான சட்டப்பிரிவாக இருந்தாலும், எந்த விசாரணை அமைப்பு என்பதன் அடிப்படையிலேயே அதிகாரம் அமையும் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
ஒன்றிய அரசின் வாதத்தைக் கேட்ட நீதிபதிகள், “இந்திய குற்றவியல் சட்டத்தின் 432 மற்றும் 161 பிரிவுகளிடையே என்ன வேறுபாடு உள்ளன?. பேரறிவாளன் வழக்கில், கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஆளுநர் முடிவெடுக்காதது ஏன்?. இதுவரை வழங்கப்பட்ட இரண்டு வாய்ப்புகள் தொடர்பாக ஒன்றிய அரசின் முடிவு என்ன?. இந்திய குற்றவியல் வழக்குகளில் முடிவெடுக்க, குடியரசு தலைவருக்கு அதிகாரம் உள்ளதா?” என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
‘பேரறிவாளன் விடுதலை குறித்து முடிவு எடுக்க ஆளுநருக்கு அதிகாரமில்லை’ – உச்ச நீதிமன்றம்
மேலும், கிரிமினல் வழக்குகளில் மாநில அரசுகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று ஒன்றிய அரசு கூறுவது போல தெரிகிறது. அமைச்சரவை முடிவை ஆளுநருக்கு அனுப்பும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளதா? என்பதை தெளிவுபடுத்துங்கள். பேரறிவாளன் வழக்கில் நேரம் வீணடிக்கப்படுகிறது. 75 ஆண்டுகளாக இந்திய குற்றவியல் சட்ட வழக்குகளில் ஆளுநர்களின் மன்னிப்புகள் அனைத்தும் அரசியலமைப்பு முரணானதா? ஆளுநருக்காக மாநில அரசுதான் வாதிட வேண்டும், மத்திய அரசு வாதிடுவது ஏன்?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
தமிழக அரசு இவ்விஷயத்தில் தலையிட அதிகாரம் இருக்கிறதா என்பதே பிரதான கேள்வியாக இருக்கிறது’ என்று ஒன்றிய அரசு வாதிட்டது. இதற்குத் தமிழ்நாடு அரசு சார்பில், `பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கில் வாதிட, எங்களுக்கு உரிமை உள்ளது. மத்திய அரசு இதில் தலையிட்ட பின்னர்தான் குழப்பமே தொடங்கியது’ என்று கூறப்பட்டது.
Source: Puthiyathalaimurai
Shawarma Ban ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரானது Dr Kantharaj Interview | Shawarma Ban | Veg Vs Non Veg
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.