Aran Sei

சிபிஎஸ்இ பாடத்திட்டம்: ஜனநாயகம், பன்முகத்தன்மை, முகலாய நீதிமன்றங்களின் வரலாறு உள்ளிட்ட பல பாடங்கள் நீக்கம்

சிபிஎஸ்இ பாடத்திட்டத்திலிருந்து ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மை என்ற பாடம் நீக்கப்பட்டுள்ளது. தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கழகம் (NCERT) அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

‘சிபிஎஸ்இ வினா தாளில் பெண் வெறுப்பு கேள்வி’ – ஒன்றிய அரசு மன்னிப்பு கேட்க வலியுறுத்தி காங்கிரஸ், திமுக வெளிநடப்பு

அணிசேரா இயக்கம், பனிப்போர் காலகட்டம், ஆசிய – ஆப்பிரிக்கப் பகுதிகளில் இஸ்லாமியப் பேரரசுகளின் எழுச்சி, முகலாய நீதிமன்றங்களின் வரலாறு மற்றும் தொழில்துறை புரட்சி ஆகிய அத்தியாயங்கள் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளின் வரலாறு மற்றும் அரசியல் அறிவியல் பாடத்திட்டங்களிலிருந்து சிபிஎஸ்இ நீக்கியுள்ளது

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள ‘உணவு பாதுகாப்பு’ என்ற பிரிவில் ‘உலகமயமாக்கல் விவசாயத்தில் ஏற்படுத்திய தாக்கம்’ என்ற பகுதியும் நீக்கப்பட்டுள்ளது.

‘தேர்வில் மத துவேஷத்தை வளர்க்கும் சிபிஎஸ்இ’ – பேராசிரியர் ஜவாஹிருல்லா கண்டனம்

‘மதம், வகுப்புவாதம் மற்றும் அரசியல் – வகுப்புவாதம், மதச்சார்பற்ற அரசு’ ஆகிய பகுதியிலிருந்த ஃபைஸ் அகமது ஃபைஸ் என்பவர் எழுதிய 2 உருது கவிதைகளின் ஆகிய மொழிபெயர்ப்பும் நீக்கப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ 11 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றிருந்த கூட்டாட்சி, குடியுரிமை, தேசியவாதம் மற்றும் மதச்சார்பின்மை பற்றிய அத்தியாயங்கள் நீக்கப்படுகிறது என்று 2020 இல் சிபிஎஸ்இ அறிவித்திருந்தது பெரிய சர்ச்சையை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.

Source : NDTV

Ilayaraja விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் கிடையாது

சிபிஎஸ்இ பாடத்திட்டம்: ஜனநாயகம், பன்முகத்தன்மை, முகலாய நீதிமன்றங்களின் வரலாறு உள்ளிட்ட பல பாடங்கள் நீக்கம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்