Aran Sei

வள்ளுவரை காவியாக்கிய சிபிஎஸ்இ: ’ஆரிய வித்தையை தமிழகம் ஏற்காது’ – ஸ்டாலின் கண்டனம்

த்திய அரசின் சிபிஎஸ்இ (Central Board of Secondary Education) 8-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் சர்ச்சைக்குரிய வகையில் திருவள்ளுவரின் உருவப்படம் இடம்பெற்றிருப்பதற்கு திமுக தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கே. ஆர். வேணுகோபால் சர்மாவால் வரையப்பட்ட வெண்ணிற ஆடை, நீண்ட கொண்டை, தாடி, என, பலகையில் அமர்ந்து ஒரு கையில் ஓலைச்சுவடி மறுகையில் எழுத்தாணி, தலைக்குப் பின்னால் அறிவொளி என, அமர்ந்திருக்கும் திருவள்ளுவர் உருவப்படமே, தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட உருவப்படமாகும்.

‘கார்பரேட்கள் லாபம் பெற அரசு தன் ஆன்மாவை விற்றுவிட்டது’ – அகில இந்திய விவசாய  சங்கம் குற்றச்சாட்டு

இந்நிலையில், சிபிஎஸ்இ 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான புத்தகம் ஒன்றில், திருவள்ளுவர் காவி உடையில் அமர்ந்திருப்பது போன்ற படம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (பிப். 20) தன் ஃபேஸ்புக் பக்கத்தில் தன்னுடைய கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். அதில்,”சிபிஎஸ்இ 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான புத்தகம் ஒன்றில் திருவள்ளுவருக்கு ஆரிய அரிதாரம்!

பாஜக அரசு அனுமதிக்கிறது; அடிமை அதிமுக அரசு வேடிக்கை பார்க்கிறது.

ஆரிய வித்தைகளை எம்தமிழர் பண்பாட்டில் காட்ட எத்தனித்தால் தமிழகம் ஏற்காது; மானமுள்ள திமுக பொறுக்காது. எச்சரிக்கை!” எனப் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, 2020-ம் ஆண்டு, திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, காவி உடையில் திருவள்ளுவர் இருப்பது போன்ற படத்தைத் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதற்கு, பல்வேறு தரப்புகளிலிருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அப்படத்தை நீக்கியது குறிப்பிடத்தக்கது.

போதைப் பொருள் கடத்தல்: பாஜக இளைஞரணி மாநிலத் தலைவர் பமீலா கோஸ்வாமி கைது

பாஜக வின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, திருவள்ளுவருக்கு காவி உடையளித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டபோதும் தமிழகத்தில்  பெரும் சர்ச்சை உருவானது. இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் வள்ளுவருக்கு காவி துணி போர்த்தியபோது பெரும் சர்ச்சை ஆனது நினைவுகூரத்தக்கது.

 

வள்ளுவரை காவியாக்கிய சிபிஎஸ்இ: ’ஆரிய வித்தையை தமிழகம் ஏற்காது’ – ஸ்டாலின் கண்டனம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்