தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் நிர்வாக இயக்குனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சித்ரா ராமகிருஷ்ணாவிடம் மத்தியப் புலனாய்வுத் துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
பங்குச்சந்தையின் செயல்பாடுகள் தொடர்பாக இமயமலையில் இருக்கும் சாமியார் ஒருவரிடம் ஆலோசனை பெற்றதன் மூலம் பங்குச்சந்தையின் ரகசியத்தன்மையை மீறியதோடு, அதிகார துஷ்பிரயோகத்தில் சித்ரா ஈடுபட்டுள்ளார் என பங்குச்சந்தைகள் மற்றும் இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) குற்றம்சாட்டியிருந்தது.
ஆனந்த சுப்ரமணியன் என்பவரைச் சாமியாரின் ஆலோசனையின் பெயரில் நிர்வாக இயக்குநரின் ஆலோசகர் மற்றும் பங்குச்சந்தையின் குழு இயக்க அதிகாரியாக நியமித்ததாக செபி கூறியுள்ளது
ஏப்ரல் 2013 முதல் டிசம்பர் 2016 வரை தேசிய பங்குச் சந்தையின் நிர்வாக இயக்குனராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பதவி வகித்த சித்ரா ராமகிருஷ்ணா, தனிப்பட்ட காரணங்களுக்காக 2016ல் பதவி விலகினார். சித்ரா ராமகிருஷ்ணா வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய நிலையில் மத்தியப் புலனாய்வுத் துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.