Aran Sei

சாதிப் படிநிலையின் நுகத்தடியை களைய விரும்புபவர்களுக்கு ‘சாதியற்ற இந்துக்கள்’ என்ற சான்றிதழ் வழங்க வேண்டும் – உச்ச நீதிமன்றத்தில் மனு

சாதியற்ற இந்து’ என்று அதிகாரப்பூர்வமாக சான்றிதழ் பெறுவதற்கான தனது உரிமையை வலியுறுத்தி ஒரு மருத்துவர் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

சாதிப் படிநிலையின் நுகத்தடியை களைய விரும்புபவர்களுக்கு ‘சாதியற்ற இந்துக்கள்’ சான்றிதழ் வழங்க ஒன்றிய அரசிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

வலதுசாரிகள் தலித்துகள் மேல் காட்டும் கரிசனம் உண்மையானதா? – வரலாறு சொல்வது என்ன?

மக்கள் தங்களது இந்து மதத்தை தக்க வைத்துக் கொண்டாலும், தங்களது சாதி அந்தஸ்தை விட்டுக் கொடுக்க விரும்பும் மக்களுக்கு அதற்கான வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. ஆகவே தன்னை இந்துவாக கருதும் மக்களுக்குள் சமத்துவத்தை உருவாக்கச் சாதியற்ற இந்து சான்றிதழ் வழங்க வேண்டும். இது சாதி படிநிலையில் அடிமைத் தளைகளிலிருந்து வெளியேற விரும்புபவர்களுக்கு வாய்ப்பாக அமையும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுதாரர் ஒரு படித்த நபர், மருத்துவர் ஆகவே அவரை வரையறுக்க சாதி சான்றிதழ் தேவையில்லை மனுதாரர் கருதுகிறார். அவர் இந்துவாக இருந்து கொண்டே சாதியற்றவராக தன்னை அறிவித்துக் கொள்ள விரும்புகிறார் என்று மனுதாரரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

Source : thehindu

இந்த சவுண்ட்லாம் இங்க வேணாம் Annamalai | Surya Xavier Interview

சாதிப் படிநிலையின் நுகத்தடியை களைய விரும்புபவர்களுக்கு ‘சாதியற்ற இந்துக்கள்’ என்ற சான்றிதழ் வழங்க வேண்டும் – உச்ச நீதிமன்றத்தில் மனு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்