2019ஆம் ஆண்டு, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடிய 46 பேர் மீது கேரளா அரசு, கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி வழக்குப் பதிவு செய்திருப்பதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதியவில்லை என அம்மாநில முதல்வர் சட்டமன்றத்தில் குறிப்பிட்டிருந்த நிலையில், வழக்கு பதியப்பட்டிருப்பது, அரசின் இரட்டை நிலைப்பாட்டைக் காட்டுவதாக, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தி நியூஸ் மினிட் வெளியிட்டுள்ள செய்தியில், “2019 ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த அரசியல், மத தலைவர்கள் 46 பேருக்கு கோழிக்கோடு நகர காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் மாநிலத்தின் முக்கிய தலைவர்கள் மற்றும் செயல்பாட்டாளர்களான கே.கே.பாபுராஜ், டி.டி.ஸ்ரீகுமார், ஜெ.தேவிகா, என்.பி.சேக்குட்டி, நாசர் பெய்சி குடத்தை மற்றும் மறைந்த டி.பீட்டருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு இருக்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே இரவில் அனைத்து செய்திகளையும் முடக்கிய ஃபேஸ்புக் – ஆஸ்திரேலிய அரசு அதிர்ச்சி
பிப்ரவரி 17, 2019 நடைபெற்ற போராட்டம் தொடர்பான வழக்கில், கோழிக்கோடு முதன்மை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் வழங்கப்பட்டிருப்பதாகவும், போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மட்டுமல்லாது அதற்கு ஆதரவு தெரிவித்தவர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பபட்டிருப்பதாக, தி வயர் தெரிவித்துள்ளது.
போராட்டக்காரர்கள்மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 109 (கலவரத்தை தூண்டுதல்), 143 (சட்டவிரோத செயலில் ஈடுபடுதல்), 147 (கலவரத்தில் ஈடுபடுதல்), 283 (பொதுவழியில் ஆபத்து விளைவித்தல் அல்லது மறித்தல்), 149 (பொது செத்துக்களை சேதப்படுத்தும் விதமாக சட்டவிரோத செயலில் ஈடுபடுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டிருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தீஷா ரவி “ஜோசப்” என பரப்பியவர்கள் மதவெறி பிடித்த இந்துத்துவவாதிகள் – சசி தரூர் கடும் கண்டனம்
கேரளா உயர்நீதிமன்றத்தின் உத்தரவை மீறும் விதமாக, அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதால் வழக்கு பதியப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ள நிலையில், அனுமதி கோரியபோது மறுத்துவிட்டு, தற்போது வழக்கு தொடர்வது அரசின் இரட்டை நிலைப்பாட்டைக் காட்டுவதாக போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டுவதாக, தி வயர் தெரிவித்துள்ளது.
40க்கும் மேற்பட்ட அமைப்புகள் சார்பில், மாநிலம் முழுவதும் நடைபெற்ற வந்த போராட்டங்களில் பிப்ரவரி 17, 2019 ஆம் தேதி வன்முறைகள் பதிவாகி இருப்பதாக காவல்துறை குற்றம்சாட்டுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாநில அமைச்சர் மீது வெடிகுண்டு வீச்சு: ‘கட்சி மாற வற்புறுத்தி தாக்குதல்’ – மம்தா குற்றஞ்சாட்டு
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டங்கள் தொடர்பாக, 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், அம்மாநில சட்டப்பேரவையில் பேசிய மாநில முதல்வர் பினராய் விஜயன், “பல அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்த எதிர்ப்பாளர்கள் யார் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. ஆனால் வன்முறையில் ஈடுபடுபவர்மீது நடவடிக்கை எடுக்கப்படும். எந்தவொரு அரசாங்கமும் அதைச் செய்யும். குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கும், அந்த வழக்குகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என கூறியதாக, தி வயர் தெரிவித்துள்ளது
கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் முடிவடைந்த பிறகு, குடியுரிமை திருந்தச் சட்டம் இந்தியா முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும் என அமித் ஷா கூறியிருந்ததற்கு பதிலளிக்கும் விதமாக, பிப்ரவரி 14 ஆம் தேதி திருவனந்தபுரத்தி நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய பினராய் விஜயன், “நாங்கள் எங்கள் நிலைப்பாட்டை ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளோம். இந்த அரசாங்கம் கேரளாவில், இந்தப் பேரழிவை அனுமதிக்காது” எனக் கூறியதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.