ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் ஷெரீப் தர்காவுக்கு எதிராக அவதூறான மற்றும் அவமரியாதையான கருத்துக்களைக் கூறியதன் வழியாக மத நம்பிக்கைகளை புண்படுத்திய தெலுங்கானாவைச் சேர்ந்த பாஜக சட்டமன்ற உறுப்பினரான ராஜ சிங் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நேற்று (ஜூன் 6) கோஷமஹால் பகுதியை சேர்ந்த அலி என்பவர் ராஜ சிங்கிற்கு எதிராக காவல்துறையில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் சட்டமன்ற உறுப்பினர் ராஜ சிங் அண்மைக்காலங்களில் பேசிய சில யூடியூப் காணொளிகளை ஆதாரமாக காட்டியுள்ளார்.
மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கத்துடன் வேண்டுமென்றே தீங்கிழைக்கும் செயல்களை செய்தல் பிரிவு 295 ஏ இன் கீழ்க் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற ராமநவமி ஊர்வலத்தின்போது மத வெறுப்பை உருவாக்கும் வகையில் பேசியதாக பாஜக சட்டமன்ற உறுப்பினரான ராஜ சிங் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Source : the hindu
மிரட்டிய அரபு நாடுகள் உதறலில் பாஜக Dr Sharmila Interview
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.