Aran Sei

இலவசம் தொடர்பான வழக்கு: கார்ப்பரேட்டுகளுக்கு ஒன்றிய அரசின் வரிச்சலுகை இலவசம் இல்லையா? – உச்சநீதிமன்றத்தில் திமுக மனு

லவச திட்டங்களுக்கு எதிரான வழக்கில் தன்னையும் இணைத்துக் கொள்ளக் கோரி, தமிழ்நாட்டில் ஆளும் கட்சியான தி.மு.க., உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

இலவசங்களுக்கு எதிரான வழக்கு குறித்து விசாரிக்கும்போது, ​​வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் ஒன்றிய அரசின் வரி சலுகைகள், தொழிலதிபர்களுக்கு செய்யப்படும் கடன்களை தள்ளுபடி.  விருப்பமான நிறுவனங்களுக்கு முக்கியமான ஒப்பந்தங்களை வழங்குதல் போன்றவற்றை நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும் என்று திமுக கோரியுள்ளது.

கல்வியும் தனியார்மயமும்  – பேரா. A.P. அருண்கண்ணன்

மேலும், ஏன் மாநில அரசுகளின் சமூக நலத்திட்டங்கள் (Welfare scheme) மட்டும் இலவசங்கள் என கூறப்படுகின்றன? பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு தரும் வரிச்சலுகைகளை (Tax holidays) இலவசம் இல்லையா? கார்ப்பரேட் நிறுவனங்களின் வராக் கடன்களை (Waiver of bad loans) ஒன்றிய அரசு தள்ளுபடி செய்வது இலவசமில்லையா? மிக முக்கியமான வணிக ஒப்பந்தங்களை  கார்ப்பரேட்டுகளுக்கு தருவது இலவசம் இல்லையா? என்று திமுகவின் மனுவில் கேள்வி எழுப்பட்டட்டுள்ளது.

வருமானம், அந்தஸ்து, வசதிகள் மற்றும் வாய்ப்புகள் ஆகியவற்றில் ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்கும் வகையில், சமூக ஒழுங்கு மற்றும் பொருளாதார நீதியைப் பாதுகாக்க, சட்டப்பிரிவு பிரிவு 38ன் கீழ், இலவசங்கள் வழங்கும் நலத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று திமுகவின் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கேரளம்: பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநரின் அதிகாரத்தை குறைக்க முடிவு – மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த அமைச்சரவை

இலவச மின்சாரம் போன்ற திட்டங்கள் ஒரு ஏழை குடும்பத்தில் பல நல்ல விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.,இலவச மின்சாரம் வழங்குவதால் மக்களின் வாழ்க்கை தரம் மேம்பட்டுள்ளது. இது ஒரு குழந்தைக்கு கல்வி மற்றும் படிப்பை எளிதாக்கும். “ஒரு நலத்திட்டம் அதன் அறிமுகத்திற்குப் பின்னால் பரந்த அளவிலான பல நோக்கங்களைக் கொண்டிருக்கிறது என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. இலவசத்தின் நோக்கம் மிகவும் விரிவானது. அதில் கருத்தில் கொள்ள வேண்டிய பல அம்சங்கள் உள்ளன என்று சுட்டிக்காட்டிய மனு, ஒரு மாநில அரசின் நலத்திட்டத்தை மட்டும் இலவசம் என்று வகைப்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ளது.

இந்த வழக்கை உச்சநீதி மன்றத்தில் அஸ்வின் குமார் உபாத்யா என்பவர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

குஜராத்; பில்கிஸ் பானு வழக்கு: “நிகழ்ந்த கொடூரத்தை மறக்க முடியவில்லை” – பாதிக்கப்பட்டவரின் கணவர் யாகூப் ரசூல்

இந்த பாஜகவைச் சேர்ந்தவர். செய்தி தொடர்பாளராக இருந்தவர். டெல்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு கோஷங்களை எழுப்பிய வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: newindianexpress

இலவசம் தொடர்பான வழக்கு: கார்ப்பரேட்டுகளுக்கு ஒன்றிய அரசின் வரிச்சலுகை இலவசம் இல்லையா? – உச்சநீதிமன்றத்தில் திமுக மனு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்