ராஜிவ் காந்தியின் மகன் தான் ராகுல் காந்தி என்பதற்கான ஆதாரத்தை நாங்கள் என்றாவது கேட்டிருக்கிறோமா? என பேசியதற்காக அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மீது ஹைதராபாத் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தெலுங்கானா பிரதேஷ் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ரேவந்த் ரெட்டி அளித்த புகாரைத் தொடர்ந்து அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மீது இந்தியத் தண்டனைச் சட்டம் 504 மற்றும் 505 (2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
“அஸ்ஸாம் முதலமைச்சரின் இந்த கருத்து ஒரு பெண்ணை அவமானப்படுத்தும் விதமாக உள்ளது. ஆகவே அவரை முதலமைச்சர் பதவியில் இருந்து பாஜக நீக்கியிருக்க வேண்டும். ஆனால், அஸ்ஸாம் முதல்வரின் கருத்துக்கு பாஜகவோ ஆதரவு அளித்தது வருகிறது” என ரேவந்த் ரெட்டி என்று கூறியுள்ளார்.
ராகுல் காந்தியை அவதூறாகப் பேசியதாக அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மீது அஸ்ஸாம் மாநில காங்கிரஸ் காவல்துறையில் புகார் அளித்துள்ளது.
ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் இத்தகைய கருத்து என்பது இந்திய நாகரிகம் மற்றும் கலாச்சாரத்திற்கு எதிரானது என்று அஸ்ஸாம் மாநில காங்கிரஸ் கூறியுள்ளது.
திஸ்பூர் காவல் நிலையத்தில் அளித்த மற்றொரு புகாரைக் காவல்துறையினர் எவ்வித காரணமும் இல்லாமல் ஏற்க மறுத்து விட்டதாக அஸ்ஸாம் மாநில காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அஸ்ஸாம் முதலமைச்சர் காவல்துறையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும், அஸ்ஸாம் காவல்துறை ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவைத் தவிர வேறு யாருடைய கருத்தையும் மதிப்பதில்லை என்று காங்கிரஸ் மூத்த செய்தித் தொடர்பாளர் மஞ்சித் மஹந்தா தெரிவித்துள்ளார்.
அஸ்ஸாம் முதலமைச்சரின் இந்த கருத்துக்கு பல்வேறு மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் புகார் அளித்து வருவதும், மற்ற மாநில முதலமைச்சர்கள் உட்பட பல எதிர்க்கட்சி தலைவர்களும் விமர்சித்து வருகின்றனர்.
Source : NDTV, New Indian Express
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.