தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பாலியல் வன்கொடுமைக்குள்ளான சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட பாஜக சட்டமன்ற உறுப்பினர் ரகுநந்தன் ராவ் மீது தெலுங்கானா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஹைதராபாத்தில் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் 17 வயது சிறுமியைக் காரில் வைத்து 5 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த வழக்கில் இதுவரை 4 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த வாரம் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் ரகுநந்தன் ராவ், “பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் ஒரு சட்டமன்ற உறுப்பினர் மகன் காரில் இருந்ததற்கான ஆதாரம் எனக்கூறி செய்தியாளர்களுக்கு ஒரு புகைப்படம் மற்றும் வீடியோவைக் காட்டினார். அத்துடன் சட்டமன்ற உறுப்பினரைக் காப்பாற்ற காவல்துறையினர் முயற்சிப்பதாக குற்றம் சாட்டியிருந்தார்.
ரகுநந்தன் வெளியிட்ட புகைப்படம் மற்றும் காணோளியை பலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். இதற்குப் பல்வேறு அமைப்புகள் மற்றும் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளிப்படுத்துவது தொடர்பான இந்திய தண்டனைச் சட்டத்தின் 228 -ஏ பிரிவின் கீழ் ரகுநந்தன் ராவ் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள பாஜக சட்டமன்ற உறுப்பினர் ரகுநந்தன் ராவ் “நான் வெளியிட்ட அந்த வீடியோ மற்றும் புகைப்படங்களில் குற்றம் சாட்டப்பட்டவரின் முகம்தான் தெரிகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் முகத்தைக் காட்டாமலும் அவரது அடையாளத்தை வெளிப்படுத்தாமலும்தான் வெளியிட்டேன். இதை ஆதாரமாகவே காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் வெளியிட்டேன். அந்தப் படத்தில் இருக்கும் சட்டமன்ற உறுப்பினரின் மகனை ஏன் காவல்துறையினர் குற்றவாளியாகக் குறிப்பிடவில்லை” என்று கேள்வி எழுப்பினார்.”
Source: Puthiyathalaimurai
Nupur Sharma செஞ்ச தப்புக்கு இந்தியர்கள் ஏன் மன்னிப்பு கேட்கணும்? Nupur Sharma on Prophet Muhammad
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.