பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக தொடரப்பட்ட பொதுநல மனுக்களுக்கு 3 வார காலத்திற்குள் பதிலளிக்க உத்தரவிட்டு ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
கடந்த 2002ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் குறித்து பிபிசி நிறுவனம் ‘இந்தியா-மோடிக்கான கேள்விகள்’ என்ற ஆவணப்படத்தை வெளியிட்டிருந்தது. இந்தப்படத்தினை திரையிடுவதற்கு ஒன்றிய அரசு தடை விதித்தது. இதனை எதிர்த்து மூத்த பத்திரிக்கையாளர் என்.ராம், வழக்கறிஞர் பிரசாந்த் பூசன், திரிணாமூல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மௌவா மொய்த்ரா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தனர். அதேபோல் இந்த தடை உத்தரவை ரத்து செய்யவேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் பி.எல்.சர்மாவும் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, எம் எம் சுந்தரேஷ் அடங்கிய அமர்வு, “இந்த மனுக்களுக்கு மூன்று வார காலத்திற்குள் ஒன்றிய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் இந்த ஆவணப்படத்தின் தடைக்கான உண்மையான ஆவணங்களையும் தாக்கல் செய்யுமாறு ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து நீதிபதிகள் அமர்வு,”நாங்கள் நோட்டீஸ் அனுப்புகிறோம். அதற்கு மூன்று வாரங்களுக்குள் பதில் அளிக்கப்படும். அதனைத் தொடர்ந்து இரண்டு வாரங்களில் வழக்கில் இணைந்து கொள்ளுங்கள் என்று தெரிவித்தனர். இந்த வழக்குகளின் மறுவிசாரணை ஏப்ரல் மாதத்திற்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
Source : the hindu
Edappadi and OPS afraid of Modi and BJP I Annnamalai has lost already I Erode bye election 2023
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.