Aran Sei

‘உண்மையை பேச முடியாததால் விலகுகிறேன்’ – விவசாயிகள் போராட்டத்தில் ராஜினாமாவை அறிவித்த பத்திரிகையாளர்

ண்மையை எழுத தனக்கு அனுமதி மறுக்கப்படுகிறது என்று கூறி, பத்திரிகையாளர் ஒருவர், தான் பணிப்புரியும் ஏபிபி செய்தி நிறுவனத்திலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.

மூன்று விவசாய சட்டங்களை திரும்ப பெறக்கோரி, உத்தரபிரதேசம் முழுவதும் ராஷ்ட்ரிய லோக் தள கட்சி பேரணிகளையும் மகாபஞ்சாயத்துகளையும் நடத்தி வருகிறது. இந்நிலையில், நேற்று (பிப்ரவரி 27) மீரட்டில் நடைபெற்ற  மகாபஞ்சாயத்தில், அக்கட்சியின் தேசிய துணைத் தலைவர் ஜெயந்த் சவுத்ரி கலந்துக்கொண்டு உரையாற்றியுள்ளார்.

அப்போது, ஏபிபி செய்தி நிறுவனத்தில் பணிபுரியும் ரக்‌ஷித் சிங் என்ற பத்திரிகையாளர், மேடையில் ஏறி பேசியுள்ளார். “எனக்கு இந்த வேலை தேவையில்லை. நான் உண்மையை பேச விரும்பியதால்தான், இந்த வேலையை செய்ய விரும்பினேன். ஆனால், நான் உண்மையை பேச அனுமதிக்கப்படவில்லை.” என்று தெரிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ்  செய்தி வெளியிட்டுள்ளது.

 

அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்த வழக்கில் கைது செய்யப்பட்ட எழுத்தாளர் – வங்கதேச சிறையில் மரணம்

இது தொடர்பாக தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய ரக்‌ஷித் சிங், “கடந்த மூன்று மாதங்களாக நிறையவே நடந்துவிட்டது. நாங்கள் எழுதும் கட்டுரைகளில் மத்திய அரசை பற்றி சிறிதேனும் விமர்சித்திருந்தால் கூட, அக்கட்டுரை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.” என்று கூறியுள்ளார்.

மகாபஞ்சாயத்தில் ராஜினாமா செய்த சிறிது நேரத்தில், தனது ராஜினாமாகுறித்து விளக்கும் வகையில், மூன்று காணொளிகளை தனது ட்விட்டர் பக்கத்தில் ரக்ஷித் சிங் வெளியிட்டுள்ளார்.

‘உண்மையை பேச முடியாததால் விலகுகிறேன்’ – விவசாயிகள் போராட்டத்தில் ராஜினாமாவை அறிவித்த பத்திரிகையாளர்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்