புதுச்சேரியில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. புதுச்சேர் துணைநிலை ஆளூநர் தமிழிசை சௌந்தரராஜன் பரிந்துரையை ஏற்று, அங்கு குடியரசு தலைவர் ஆட்சிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் இதற்காக ஒப்புதல் அளிக்கப்பட்டது எனக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.
கடந்த ஜனவரி மாதம் தொடங்கி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து வந்தனர். இதனையடுத்து பிப்ரவரி 17 ஆம் தேதி, என்.ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர், துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை சந்தித்து, புதுச்சேரியில் ஆளும் கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்துள்ளதாகவும், ஆகவே பெரும்பான்மையை நிருபிக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
‘வெற்றியுடன் திரும்புவேன் என்ற அப்பா எங்கே?’ – 5 வயது மகனுடன் அப்பாவை தேடும் விவசாயி மகள்
எதிர்கட்சியினர் கோரிக்கையை ஏற்றத் துணைநிலை ஆளுநர், பிப்ரவரி 22ஆம் தேதி, நாராயணசாமி அரசு சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிருபிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
திமுக சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், பிப்ரவரி 21 ஆம் தேதி, சட்டமன்ற அவைத்தலைவர் சிவக்கொழுந்தை சந்தித்து, ராஜினாமா கடித்தத்தை அளித்தார்.
டெல்லி கலவர வழக்கில் நீதி கிடைப்பதில் தாமதம் – பிருந்தா காரத் குற்றச்சாட்டு
இந்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பில், நாராயணசாமி தலைமையிலான கூட்டணி அரசு பெரும்பான்மையை நிருபிக்க முடியாததால், நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை வழங்கிய ராஜினாமா கடித்தை துணைநிலை, ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஏற்றுக் கொண்டதாக அறிவித்தார்.
இந்நிலையில புதுச்சேரியில் ஆட்சியமைக்க எந்தக் கட்சியும் உரிமை கோராததை அடுத்து, அங்கு குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த, தமிழிசை சௌந்தரராஜன் பரிந்துரை செய்தார்.
Source: PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.