Aran Sei

கொரோனா தடுப்பூசி நடவடிக்கைகள் முடிந்தது குடியுரிமை திருத்தச் சட்ட விதிகள் உருவாக்கப்படும் – மேற்கு வங்க பாஜக தலைவரிடம் அமித் ஷா உறுதி

Credit: The Quint

கொரோனா தடுப்பூசி நடவடிக்கைகள் முடிந்தது குடியுரிமை திருத்தச் சட்ட விதிகள் உருவாக்கப்படும்  என்று மேற்கு வங்க பாஜக தலைவரிடம் அமித் ஷா உறுதியுளித்துள்ளார்.

2019 டிசம்பரில் குடியுரிமை திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், விதிகள் வகுக்கப்படாததால், சட்டம் அமல்படுத்தப்படாமல் இருக்கிறது.

சிஏஏவுக்கான விதிகள் இயற்றப்பட்டு வருகிறது – உள்துறை அமைச்சர் அமித் ஷா தகவல்

கொரோனாத் தொற்று காரணமாக, விதிகள் வகுக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்திருந்தது.

அமித் ஷாவுடனான சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சுவேந்து அதிகாரி, ”குடியுரிமை திருத்தச் சட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்த வலியுறுத்தியுள்ளேன். சிஏஏ திட்டம் மேற்கு வங்கத்திற்கு முக்கியமானது. அதன் விதிகளிலிருந்து பயனடையக்கூடிய ஏராளமான மக்கள் அங்கு இருக்கிறார்கள்”என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா முன்னச்சரிக்கை தடுப்பூசி நடவடிக்கைகள் முடிவடைந்ததும், குடியுரிமை திருத்தச் சட்ட விதிகள் உருவாக்கப்படும் என்று அமித் ஷா உறுதியளித்துள்ளதாக சுவேந்து அதிகாரி கூறியுள்ளார்.

Source: The Hindu

 

கொரோனா தடுப்பூசி நடவடிக்கைகள் முடிந்தது குடியுரிமை திருத்தச் சட்ட விதிகள் உருவாக்கப்படும் – மேற்கு வங்க பாஜக தலைவரிடம் அமித் ஷா உறுதி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்