கர்நாடகாவில் பேருந்து நிலையம் ஒன்று பார்ப்பதற்கு மசூதி போல உள்ளது. ஆகவே அதனை இடித்து தரைமட்டமாக்க வேண்டும் என்று பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரதாப் சிம்ஹா கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த பேருந்து நிலையம் மைசூரு-ஊட்டி சாலையில் உள்ளது. அரசு நிர்வாகம் இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கையில் இறங்காவிட்டால், நானே நேரடியாக புல்டோசர் கொண்டு அந்த கட்டமைப்பை தகர்ப்பேன் என்று மைசூர்-குடகு மக்களவைத் தொகுதி பிரதாப் சிம்ஹா தெரிவித்துள்ளார்.
“சமூக வலைத்தளங்களில் பார்த்திருக்கிறேன். பேருந்து நிலையம் மசூதியை போன்று இரண்டு மாடகோபுரங்களைக் கொண்டுள்ளது. அது மசூதி தான். இன்னும் 3-4 நாட்கள் கால அவகாசம் உள்ளது என்று பொறியாளர்களிடம் கூறியுள்ளேன். இல்லையெனில், புல்டோசர் வாகனம் மூலம் அதை தகர்ப்பேன்” என்று அவர் கூறியுள்ளார்.
முன்னதாக ஹிஜாப் சர்ச்சையின் போது, இவர் அம்மாநில எதிர்க்கட்சி காங்கிரஸ் தலைவரான சித்தராமையாவை பார்த்து சித்த’ரஹீம்’மையா என்று விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Siurce : NDTV
Annamalai BJP Under Performer | Amit Shah | Narendra Modi TN Visit | EPS OPS Sidelined | TN BJP
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.