Aran Sei

புல்லி பாய் செயலி வழக்கில் 3 மாணவர்களுக்குப் பிணை – வயதையும் முதிர்ச்சியற்ற புரிதலையும் சிலர் பயன்படுத்தியதாக நீதிபதிகள் கருத்து

ஸ்லாமியப் பெண்களை அவதூறு செய்யும் நோக்கில் புல்லி பாய் என்ற செயலியில் அப்பெண்களின் புகைப்படங்களை பதிவேற்றியது தொடர்பான வழக்கில், கைது செய்யப்பட்ட மூன்று மாணவர்களுக்கு பிணை வழங்கிய பந்த்ரா குற்றவியல் நடுவர் நீதிமன்றம், “அம்மாணவர்களின் முதிர்ச்சியற்ற வயதையும் புரிதலையும் குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்கள் தவறாகப் பயன்படுத்தியுள்ளனர்” என்று கூறியுள்ளது.

மகாராஷ்ட்ராவில் உள்ள பந்த்ரா குற்றவியல் நடுவர் நீதிமன்றம், கே.சி. ராஜ்புத், விஷால் குமார் ஜா, ஸ்வேதா சிங், மயங்க் அகர்வால் ஆகிய மூன்று மாணவர்களுக்கும் ஏப்ரல் 12 அன்று பிணை வழங்கியது.  அதே நேரம், மற்ற குற்றவாளிகளான ஓம்காரேஷ்வர் தாக்கூர் மற்றும் நீரஜ் சிங் ஆகியோருக்கு பிணை வழங்க மறுத்துவிட்டது.

இந்த உத்தரவின் முழு விவரமும் நேற்று (ஏப்ரல் 19) கிடைக்கப்பெற்றுள்ளது.

இஸ்லாமியப் பெண்களை அவதூறு செய்த புல்லி பாய் செயலி வழக்கு – குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்

சமூக ஊடகங்கள் உட்பட பொதுவெளிகளில் எவ்வாறு நடந்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்த ‘கவுன்சிலிங்’ (ஆலோசனை வகுப்பு) பெறுவதற்கான வசதிகளை, இம்மூன்று மாணவர்களின் பெற்றோர் அல்லது பராமரிப்பாளர்கள் அம்மாணவர்களுக்கு வழங்கு பெறுமாறு நீதிமன்றம் அவ்வுத்தரவில் கேட்டுக் கொண்டுள்ளது.

முன்னதாக, இம்மாணவர்களுக்கு பிணை வழங்க மாஜிஸ்திரேட் மற்றும் செஷன்ஸ் நீதிமன்றம் மறுத்திருந்தது.

புல்லி பாய் செயலி வழியாகப் பல இஸ்லாமியப் பெண்களின் புகைப்படங்களும் தனிப்பட்ட விவரங்களும் இணையத்தில் சட்டவிரோதமாகப் பதிவேற்றப்பட்டது. அப்பெண்களை அவதூறு செய்து, அவர்களை ஏலத்தில் விடுவதாக அச்செயலியில் அறிவிக்கப்பட்டிருந்தது.

Source: PTI

அரண்செய் மீது பரப்பப்படும் அவதூறுக்கான பதில்

 

புல்லி பாய் செயலி வழக்கில் 3 மாணவர்களுக்குப் பிணை – வயதையும் முதிர்ச்சியற்ற புரிதலையும் சிலர் பயன்படுத்தியதாக நீதிபதிகள் கருத்து

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்