வளர்ச்சிப் பணிகளைத் தடுப்பவர்களுக்கு மாநிலத்தில் இடமில்லை என்றும், பிரச்சனை செய்பவர்களுக்கு எதிராக புல்டோசர்கள் தொடர்ந்து பயன்படுத்தப்படும் என்றும் உத்தரப் பிரதேச துணை முதலமைச்சர் பிரஜேஷ் பதக் எச்சரித்துள்ளார்.
பாஜகவின் கரிப் கல்யாண் சம்மேளனத்தில் உரையாற்றிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பதக், மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சி நிலவுகிறது என்றும், எந்தவிதமான இடையூறு, அமைதியின்மை மற்றும் சமூக விரோதிகளின் செயல்பாடுகளை பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் கூறியுள்ளார்.
பிரயாக்ராஜ் மற்றும் சஹாரன்பூர் மாவட்டங்களில் ஜூன் 10 வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபர்களின் சொத்துக்கள் இடித்ததை அடுத்து துணை முதல்வரின் கருத்துக்கள் வந்துள்ளன. மாநில அரசின் இந்த நடவடிக்கைக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளன
வளர்ச்சிப் பணிகளில் தடைகளை உருவாக்குபவர்களுக்கு மாநிலத்தில் இடமில்லை, பிரச்சனை செய்பவர்களுக்கு எதிராக புல்டோசர்கள் தொடர்ந்து பயன்படுத்தப்படும். சட்டம் ஒழுங்கு பிரச்சினையில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மிகவும் கண்டிப்பானவர்,” என்று பதக் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த நுபுர் சர்மா, நவீன் ஜிண்டால் ஆகியோரை கைது செய்ய வலியுறுத்தி கடந்த வெள்ளிக்கிழமை டெல்லி, உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட், மேற்கு வங்க மாநிலங்களில் போராட்டம் நடைபெற்றது. உத்தரப் பிரதேசத்தில் மட்டும் 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பிரயாக் ராஜில் வன்முறைக்குக் காரணமானவர் எனக் கூறப்படும் ஜாவேத் அகமது என்பவரின் வீடு புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டது.
இஸ்லாமியர் போராட வேண்டுமா ஒதுங்கிச் செல்ல வேண்டுமா? – ஆர். அபிலாஷ்
முறையான அனுமதி பெறாமல் கட்டப்பட்டதற்காக ஜாவேத் அகமதுவின் வீடு இடிக்கப்பட்டதாக மாநகராட்சி உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். பிரயாக் ராஜில் நடைபெற்ற மோதலுக்கு ஜாவேத் அகமதுதான் காரணம் எனக் கூறி அவரை காவல் துறை கைது செய்திருந்த நிலையில் அவரது வீடும் இடிக்கப்பட்டது. முன்னதாக காவல் துறையினர் மீது கல் வீசி தாக்கிய புகாருக்கு ஆளான மேலும் இருவரின் வீடும் ஷகாரன் பூரில் இடிக்கப்பட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.
Source: deccanherald
Annamalai மீது பாய்கிறது வழக்கு | Race Course Ragunath Interview
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.