இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிரான அரச பயங்கரவாதத்தின் சின்னமாக புல்டோசர் மாறியுள்ளது என்று ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.
ரம்ஜான் பண்டிகையை ஒட்டி, மெகபூபா முப்தி வெளியிட்ட செய்திக்குறிப்பில், “இந்தாண்டு புனித ரம்ஜான் மாதத்தின் உணர்வில் தான் இஸ்லாமியர்கள் இருந்தனர். பாஜக அரசின் அரசியல் அழுத்தங்களால் இந்தியாவில் இதுவரை இல்லாத நெருக்கடிகளை இஸ்லாமியர்கள் நிதானமாக எதிர்கொண்டனர் என்று கூறியுள்ளார்.
புல்டோசர் இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிரான அரச பயங்கரவாதத்தின் சின்னமாக மாறியுள்ளது. இந்து ராஷ்டிராவின் பாதையில் பாஜக அரசால் கட்டவிழ்த்துவிட்ட படும் வெறுப்பு செயல்கள் அதன் ஒவ்வொரு வடிவத்திலும் மிக மோசமானதாக உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
அனைத்து ஜனநாயக மற்றும் அமைதியான வழிமுறைகளின் வழியில் எனது போராட்டம் தொடரும் என்று மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.
Source : The Hindu
மிருகத்தனமாக நடந்துக்கொள்ளும் TN Police
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.