Aran Sei

உ.பி, பெண் தாக்கப்பட்ட வழக்கு: பாஜக நிர்வாகி வீட்டை புல்டோசரால் இடிப்பதென்பது பாசாங்கு – பாஜகவை சாடிய பிரியங்கா காந்தி

நொய்டாவின் கிராண்ட் ஓமாக்ஸ் சொசைட்டியில் பெண் தாக்கப்பட்ட  வழக்கில் முக்கிய குற்றம் சாட்டப்பட்டவரின் சொத்தில் உள்ள சட்டவிரோத கட்டடங்கள்  இடிக்கப்பட்டது குறித்து பாஜகவிடம் காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியங்கா காந்தி வத்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.

பெண்ணை மானபங்கம் செய்து தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட  ஸ்ரீகாந்த் தியாகியின்  சட்டவிரோத கட்டிடங்களை மாவட்ட நிர்வாகம் இடித்துள்ளது. அவர் பாஜகவின் கிசான் மோர்ச்சாவைச் சேர்ந்தவர் என்று கூறியுள்ளார். ஆனால் இதை பாஜக மறுத்துள்ளது.

‘ஜனநாயக ஊடகம் இல்லாமல் ஜனநாயக சமூகத்தை உருவாக்க முடியாது’ – பத்திரிகையாளர் சுபைரோடு ஒரு நேர்காணல்

“நொய்டா பாஜக தலைவரின் கட்டுமானம் சட்டவிரோதமானது என்பது பாஜக அரசுக்கு இத்தனை ஆண்டுகளாகத் தெரியாதா? புல்டோசர் நடவடிக்கை பாசாங்கு. இந்தக் கேள்விகளுக்கான பதில்களை அரசாங்கம் தவிர்க்கிறது” என்று காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடி – ஒன்றிய அரசின் திட்டம் தேச பக்தியா? வியாபாரமா?

“ஒரு பெண்ணிடம் தவறாக நடந்துகொள்ளவும், அவளை மிரட்ட 10-15 குண்டர்களை அனுப்பவும் அவருக்கு யார் தைரியம் கொடுத்தது? யாருடைய பாதுகாப்பின் கீழ் அவரது போக்கிரித்தனமும் சட்டவிரோத வியாபாரமும் வளர்ந்தது?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Source: NDTV

Recap | கலைஞருக்கு எதிராக சதி செய்த ஊடகங்கள் | Kalaignar Karunanidhi | Kantharaj Interview | Aransei

உ.பி, பெண் தாக்கப்பட்ட வழக்கு: பாஜக நிர்வாகி  வீட்டை புல்டோசரால் இடிப்பதென்பது பாசாங்கு – பாஜகவை சாடிய பிரியங்கா காந்தி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்