சட்டம் தூங்கும்போது ‘புல்டோசர் கலாச்சாரம்’ செழித்து வளர்கிறது என்று மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
நபிகள் நாயகம் குறித்து பாஜக பிரமுகர்கள் கருத்து தெரிவித்ததற்கு எதிராக உத்தரபிரதேச மாநிலத்தில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்று கூறப்படும் நபர்களின் வீடுகளை உத்தரபிரதேச அரசு புல்டோசர் கொண்டி இடித்து வருகிறது.
இந்நிலையில் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சட்டம் தூங்கும்போது ‘புல்டோசர் கலாச்சாரம்’ செழித்து வளர்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.
அண்மையில் காங்கிரஸில் இருந்து விலகிய கபில் சிபல், சமாஜ்வாதி கட்சியின் ஆதரவுடன் சுயேட்சையாக உத்தரபிரதேசத்திலிருந்து மாநிலங்களவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
Source : newindianexpress
அண்ணாமலை முட்டுக் கொடுப்பாரா? பாலியல் குற்றவாளியை தண்டிக்க போராடுவாரா? | BJP
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.