வங்கதேசத்தவர்கள், ரோகிங்கியர்கள் மற்றும் சமூக விரோத சக்திகளுக்குச் சொந்தமான சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை புல்டோசர் கொண்டு இடிக்க வேண்டும் என்று வடக்கு டெல்லி மற்றும் கிழக்கு டெல்லி மாநகராட்சிகளின் மேயர்களுக்கு டெல்லி பாஜக தலைவர் அதேஷ் குப்தா கடிதம் எழுதியுள்ளார்.
சட்டவிரோத கட்டடங்களை புல்டோசர் கொண்டு இடிக்க வேண்டும் என்று அதேஷ் குப்தா எழுதியிருந்த கடிதத்தின் அடிப்படையில், ஜஹாங்கிர்புரியில் இஸ்லாமியர்களுக்குச் சொந்தமான கட்டடங்களை புல்டோசர் கொண்டு வடக்கு டெல்லி மாநகராட்சி இடித்தது.
உத்தரகாண்ட்: புல்டோசரால் வீடுகள் இடிக்கப்படுவதை நியாயப்படுத்திய முதலமைச்சர்
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அதேஷ் குப்தா, “ஜஹாங்கிர்புரி கலவரக்காரர்களை காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் பாதுக்காக முயற்சிக்கின்றன” என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, கிழக்கு டெல்லியின் (இடிஎம்) மேயர் ஷியாம் சுந்தர் அகர்வால் கருத்து தெரிவிக்க மறுத்துள்ள நிலையில், ஆக்கிரமிப்புகள் அதன் தன்மைக்கு ஏற்ப அகற்றப்படும் என்று தெற்கு டெல்லி (எஸ்டிஎம்) மேயர் முகேஷ் சூர்யன் தெரிவித்துள்ளார்.
ம.பி: புல்டோசர் இடிப்புக்கு எதிரான பொதுநல மனு – தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்
”புல்டோசர் தேவைப்பட்டால் அதனை பயன்படுத்துவோம். சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்ற மூத்த தலைவர் ஆர்வம் காட்டினால், அதை வரவேற்க வேண்டும். ஓக்லா, கான்பூர் போன்ற இடங்களில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் உள்ளன. அவைமீது நடவடிக்கை எடுக்கப்பட்டும்” என்று குறியுள்ளார்.
”2007 ஆம் ஆண்டு முதல் மாநகராட்சி நிர்வாகத்தில் இருக்கும் பாஜக கட்சி, நகரம் முழுவதும் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை ஊக்குவித்துள்ளது. பாஜக கவுன்சிலர்கள் சட்டவிரோத கட்டுமானங்களை கட்ட லஞ்சம் வாங்குகின்றனர். பின்னர் அந்த கட்டுமானங்களை நீதிமன்றத்தின் தலையீட்டால் நிறுத்தி வைக்கப்படுகின்றன” என்று ஆம் ஆத்மி உறுப்பினர் அதிஷி தெரிவித்துள்ளார்.
Source: The Hindu
இந்தியாவில் செயற்கை மின்வெட்டு ஏற்படுத்தப்படுகிறதா? – உண்மையை விளக்கும் தமிழ்நாடு மின்பொறியாளர் அமைப்பின் தலைவர் சா. காந்தி
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.