இந்தியாவில் ஏழைகள் தான் அதிக ஜிஎஸ்டி வரி கட்டுகின்றனர். ஆக்ஸ்பாம் இந்தியாஅறிக்கையின் படி, மொத்த ஜிஎஸ்டியில் மூன்றில் இரு பங்கு 64.3%, குறைவான வருமானம் உடைய அடித்தட்டில் 50% ஏழை மக்களிடம் இருந்து தான் வருகின்றதாம். இதே மூன்றில் ஒரு பங்கு ஜிஎஸ்டி 40% நடுத்தர மக்களிடம் இருந்தும், மிகப்பெரிய பெரிய 10% பணக்காரர்களிடம் இருந்தும் 3 – 4% மட்டுமே ஜிஎஸ்டி கிடைக்கிறதாம். மொத்தத்தில் ஏழை மக்கள் தான் பெரும் தொகையை செலுத்துகின்றார்கள்.
2021 – 22ல் சேகரிக்கப்பட்ட மொத்த ஜிஎஸ்டியானது 14.7 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்திருந்தது. எனினும் தற்போதைய நிலவரப்படி 2022 – 23ம் நிதியாண்டில் 18 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள 10% பணக்காரர்கள் கட்டும் மறைமுக வரியை விட, கீழ் மட்டத்தில் உள்ள 50% மக்கள் 6 மடங்கு அதிகமாக மறைமுக வரி செலுத்துகின்றனர்.
அடித்தட்டில் 50% ஏழை மக்கள் தங்கள் வருமானத்தில் 6.7% வருமானத்தை உணவு மற்றும் உணவு அல்லாத பொருட்களுக்கான வரிக்காக செலவிடுகின்றனர். இதே நடுத்தர மக்கள் 40% பேர் 3.3% உணவு மற்றும் உணவு அல்லாத பொருட்களுக்காக தங்களது வருமானத்தை செலவிடுகின்றனர். இதே செல்வந்தர்களில் 10% பேர் வெறும் 0.4% மட்டுமே உணவு மற்றும் உணவு அல்லாத பொருட்களுக்காக செலவிடுகின்றனர்.
பெரும்பான்மையான ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் செலவு செய்யும் உணவுப் பொருட்கள் மற்றும் உணவு அல்லாத பொருட்களுக்கான வரியை குறைக்க வேண்டும் என்றும் இந்த ஆய்வறிக்கை கோரிக்கை விடுத்துள்ளது. இது வருவாய் ஈட்டுவதற்கு வழிவகுக்கலாம். ஆக ஏழை மக்களின் சுமையை குறைக்க வரியை குறைக்க வேண்டும்.இதற்கு மாறாக பெரும் பணக்காரர்களுக்கு அதிக வரியை அதிகரிக்க வேண்டும் என்று ஆக்ஸ்பாம் அறிக்கை சுட்டிக் காட்டுகின்றது.
Source : BBC
Supreme Court dismisses swathi plea against contempt | Gokul Raj Swathi Case | Deva’s Update 87
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.