Aran Sei

நீட் தேர்வுக்கு ஆதரவளிப்பதால் பாஜக அலுவலகத்தில் குண்டு வீச்சு – ஒருவர் கைது

பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட வினோத் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீட் தேர்வு தொடர்பான பா.ஜ.க.வின் நிலைபாட்டை கருத்தில் கொண்டு மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

சென்னை, தி.நகர், வைத்தியராமன் தெருவில் அமைந்துள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் இன்று (10.02.2022) அதிகாலை சுமார் 01.20 மணியளவில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்களை கொளுத்தி வீசியுள்ளார். இது குறித்து தகவலறிந்து R-1 மாம்பலம் காவல் நிலைய காவல் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்ததில், அதில் பதிவான எதிரியின் அடையாளத்தை வைத்து விசாரணை செய்ததில், பழைய குற்றவாளி வினோத் (எ) கருக்கா வினோத் என்பவர் மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இந்தியாவின் பன்முகத்தன்மையை பாஜக சிதைக்கிறது என்கிறார்களே ஸ்டாலினும் மம்தாவும்? – பிரதமர் மோடியோடு நேர்காணல்

அதன்பேரில் காவல் குழுவினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டு மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட வினோத் (எ) கருக்கா வினோத் என்பவரை கைது செய்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் தமிழகத்தில் நீட் தேர்வு தொடர்பாக பா.ஜ.க.வின் நிலைபாட்டை கருத்தில் கொண்டு ஆத்திரத்தில் பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் 3 பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களை வீசியது  தெரியவந்துள்ளது.

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம்: சோதனை எலிகளா தமிழ்நாட்டு மக்கள்? – பூவுலகின் நண்பர்கள் கேள்வி

மேலும் முதற்கட்ட விசாரணையில் இவர் மத ரீதியாகவோ, அரசியல் சம்மந்தமாகவோ மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபடவில்லை என்பதும், இவர் இவ்வாறு பொது பிரச்சனையில் தானாகவே தலையிட்டு குடிபோதையில் இது போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடும் மனநிலை கொண்டவர் என்பதும் தெரியவந்துள்ளது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில் விசாரணைக்குப் பின்னர் வினோத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நீட் தேர்வுக்கு ஆதரவளிப்பதால் பாஜக அலுவலகத்தில் குண்டு வீச்சு – ஒருவர் கைது

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்