Aran Sei

போதைப்பொருள் வழக்கில் கைதான பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் நிரபராதி: போதைப்பொருள் தடுப்பு பிரிவு தகவல்

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுக்கு எதிரான போதைப்பொருள் வழக்கை போதைப்பொருள் தடுப்பு பிரிவு கைவிட்டுள்ளது.

2021 அக்டோபர் 2 அன்று மும்பையின் கார்டெல்லா குரூஸ் கப்பல் விருந்து நிகழ்ச்சியில் போதைப்பொருள் வைத்திருந்ததாக போதைப்பொருள் தடுப்பு பிரிவால் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டார். ஆர்யன் கானோடு சேர்த்து 14 பேர் மீது போதைப்பொருள் தடுப்பு பிரிவு அப்போது வழக்குப் பதிவு செய்திருந்தது.

‘கான் என்ற பெயருக்காக ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் குறிவைக்கப்பட்டுள்ளார்’ – மக்கள் தேசிய கட்சி தலைவர் மெகபூபா முப்தி

இந்த வழக்கில் ஆர்யன் கானுக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று 2022 மார்ச் மாதம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் போதுமான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்று கூறி ஆர்யன் கான் உட்பட 6 பேர் மீதான வழக்கை போதைப்பொருள் தடுப்பு பிரிவு கைவிட்டுள்ளது.

Source : indianexpress

மேடையிலேயே சம்பவம் செய்த ஸ்டாலின் R Vijaya Sankar Interview

போதைப்பொருள் வழக்கில் கைதான பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் நிரபராதி: போதைப்பொருள் தடுப்பு பிரிவு தகவல்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்