Aran Sei

கங்கையில் மிதந்த சடலங்கள் – விசாரணை குழு அமைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

த்திரபிரதேசம், பிகார் மாநிலங்களில் கங்கை நதியில் சடலங்கள் மிதந்தது தொடர்பாக, ஓய்வு பெற்ற அல்லது பதவியிலிருக்கும் நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்ப்பட்டுள்ளது.

வழக்கறிஞர்கள் பிரதீப் குமார் யாதவ், விஷாக் தாக்கரே ஆகியோர் இம்மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

கடந்த வாரம் பிகாரில் உள்ள பக்ஸ்ர் மாவட்டட்தின் வழியாக செல்லும் கங்கை நதியில், 70க்கும் மேற்பட்ட மனித உடல்கள் மிகவும் மோசமான நிலையில் மிதந்தன. மேலும், உத்திர பிரதேச மாநிலத்தின் பாலியா மாவட்டம் உஜியார், குல்ஹாதியா, பாராவுளி ஆகிய பகுதியிலும் 50க்கும் அதிகமான உடல்கள் மிதந்தன.

“என் கணவரின் அடிப்படை உரிமைகளை பறிக்காதீர்கள்; அவருக்கு சிகிச்சை அளியுங்கள்” – ஹனி பாவுவின் மனைவி வேண்டுகோள்

உடல்களை உரிய முறையில் இரு மாநில அதிகாரிகளும் அடக்கம் செய்தனர். உத்திரபிரதேசத்தின் அலகாபாத், வாரணாசி பகுதிகளில் இருந்து வந்திருக்கலாம் என சந்தேகிப்பதாகவும், இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் பிகார்  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆற்றில் உடல்கள் மிதந்தது தொடர்பாக விளக்கம் கேட்டுப் பிகார், உத்திரபிரதேச மாநில தலைமைச் செயலாளர்கள், இந்திய ஒன்றியத்தின் ஜல்சக்தி அமைச்சகம் ஆகியோருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மனுவில், “நாட்டின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் மற்றும் விவசாய பயன்பாட்டிற்கு கங்கை நதி நீர் ஆதாரகமாக பயன்படுகிறது. ஆற்றில் மிதந்த உடல்கள் கொரோனா  உடல்களாக இருக்கும் பட்சத்தில், அதைப் பயன்படுத்து இரு மாநில கிராம மக்களுக்கும் தொற்று ஏற்பட வாய்ப்பிருக்கிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா : கொரோனாவிலிருந்து தப்பி ’கருப்பு பூஞ்சை தொற்று’க்கு பலியிலான 52 பேர்

”பாதி எரிந்த உடல்களை நதியில் தூக்கி வீசுவது மனிதத் தன்மையற்ற செயல். உயிரிழந்தவர்களை புதைப்பதற்கோ எரியூட்டுவதற்கோ தேவையான வசதிகளை இரு மாநில அரசுகளும் செய்து தரவில்லை. புனிதமான கங்கை நதியையும் அசுத்தப்படுத்தாமல் பாதுக்காப்பதில் இருந்து தவறிவிட்டனர்” என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

”கடமையைச் செய்யத் தவறியை இரு மாநில அதிகாரிகளும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர். எனவே, ஆற்றில் உடல்களை வீசியது தொடர்பாக, ஓய்வுபெற்ற நீதிபதி அல்லது  பதவியிலிருக்கும் நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைத்து, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும். ஆற்றில்ல் அடித்து வரப்பட்ட உடல்களை உடற்கூறு ஆய்வு செய்யவும் இரு மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்” என்று அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source : PTI

 

கங்கையில் மிதந்த சடலங்கள் – விசாரணை குழு அமைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்