தேசிய பங்குச் சந்தையின்(என்எஸ்இ) முன்னாள் மேலாண்மை இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான சித்ரா ராமகிருஷ்ணாவின் முறைககேடுகள் மற்றும் தவறான நடவடிக்கைகள் குறித்து தெரிந்தும், அதுகுறித்து புகார் தெரிவிக்காமல் தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) வாரிய உறுப்பினர்கள் மூடி மறைத்துள்ளனர் என்று இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) குற்றம்சாட்டியுள்ளது.
மேலும், சித்ரா ராமகிருஷ்ணா கௌரவமாக பதவி விலகவும் வாரிய உறுப்பினர்கள் அனுமதித்ததாக செபி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தெரிவித்துள்ள செபி, “ஒரு அடையாள தெரியாத நபரின் வழிகாட்டுதலின் படியே முக்கிய முடிவுகளை சித்ரா ராமகிருஷ்ணா எடுக்கிறார் என தெரிந்திருந்தும், அவர் ‘ராஜினாமா முலமாக கௌரவமாக’ வெளியேற, என்எஸ்இ வாரியம் அனுமதித்துள்ளது. டிசம்பர் 2, 2016 தேதி நடைபெற்ற வாரிய கூட்டத்தில், நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அவர் மேற்கொண்ட பங்களிப்பு பாராட்டுகளும் பதிவு செய்யப்படுள்ளது” என கூறியுள்ளது.
பிப்ரவரி 11, 2022 தேதி செபி வெளியிட்ட உத்தரவில், ”பலமுறை நினைவூட்டப்பட்ட பின்னரும் செபிக்கு தகவல்களை வழங்க என்எஸ்இ தவறிவிட்டது, சுப்ரமணியனை ஒரு முக்கிய நிர்வாக நபராக (கே.எம்.பி) நியமிக்கத் தவறியது மற்றும் செபியின் ஆலோசனைக்கு மரியாதை செலுத்தாதது ஆகியன சட்ட விதிகள்மீதான அவர்களின் அலட்சியத்தை நிரூபிக்கிறது” என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
“தொழில்முறை திறன், நியாயம், பாரபட்சமற்ற தன்மை மற்றும் செயல்திறன் ஆகியவற்றுடன் பங்குச் சந்தையை நிர்வகிக்க என்எஸ்இ தவறிவிட்டது; தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதில் தனிப்பட்ட நேர்மை, உண்மை, நேர்மை மற்றும் மனஉறுதி ஆகியவற்றின் உயர்ந்த தரங்களை பராமரிக்கத் தவறிவிட்டனர் மற்றும் அவர்களின் பொறுப்புகளுக்கு மதிப்பிழந்த செயல்களில் ஈடுபட்டுள்ளனர்; சுயாதீனமாகவும் புறநிலை முறையில் தங்கள் கடமைகளைச் செய்யத் தவறிவிட்டனர்; மேலும், நேர்மறையான அணுகுமுறையுடன் தங்கள் கடமைகளை செய்யத் தவறிவிட்டார்” என்று செபி கூறியுள்ளது.
Source : The Indian Express
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.