Aran Sei

போதைப் பொருள் கடத்தல்: பாஜக இளைஞரணி மாநிலத் தலைவர் பமீலா கோஸ்வாமி கைது

credits : bengali indian express

மேற்கு வங்கத்தில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக, பாஜக இளைஞர் பிரிவின் மாநிலச் செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக தி இந்துவின் செய்தி கூறுகிறது.

பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் (பாரதிய ஜனதா இளைஞர் பிரிவு) மாநிலச் செயலாளராக செயல்பட்டு வரும் பமீலா கோஸ்வாமி மற்றும் அவர் நண்பர் பிரபீர் குமார் தே ஆகியோர் போதைப்பொருள் (கொக்கேய்ன்) கடத்தலில் ஈடுபட்டதாக காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து சில லட்சங்கள் மதிப்புள்ள போதைப்ப்பொருட்கள் (100 கிராம் கொக்கேய்ன்) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்பை ராஜினாமா செய்த திரிணாமூல் காங்கிரஸ் தலைவர்: பாஜகவில் சேர அழைப்பு

இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள், “அவர் பல நாட்களாக போதைப்பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. இன்றைய தினம், தன்னுடைய வாடிக்கையாளருக்குப் போதைப்பொருட்களை கொடுக்க முற்பட்டபோது, 8 வாகனங்களில் சென்று அவரைச் சுற்றிவளைத்து கைது செய்தோம்” எனக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

‘வடஇந்தியாவின் “ஜெய் ஸ்ரீராம்” மேற்கு வங்கத்தின் முழக்கமல்ல. ஜெய் வங்காளமே எங்களுடையது’ – திரிணாமூல் காங்கிரஸ்

இந்தச் சம்பவத்தில் விசாரணையைத் தொடங்கியுள்ள காவல்துறை, பமீலா கோஸ்வாமி பின்னணியில் போதைப்பொருட்கள் கடத்தும் கும்பலின் தொடர்பு இருக்கிறதா எனும் கோணத்தில் விசாரித்து வருகிறது.

மேற்கு வங்கம் – லெனின் சிலையை திறந்து வைத்த திரிணாமூல் காங்கிரஸ் எம்எல்ஏ

இந்த வழக்கில் பமீலா திட்டமிட்டு சிக்கவைக்கப்பட்டுள்ளதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. முன்னதாக, பாஜக உறுப்பினர்கள் பலர் மீது போலியாக  வழக்குகள் பதிவு செய்யப்பட்டதை கூறிய பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் லாக்கெட் சாட்டர்ஜி, அவர் தவறு செய்திருந்தால் சட்டம் தன் கடமையைச் செய்யும் என கூறியுள்ளதாக தி இந்துவின் செய்தி கூறுகிறது.

மத்திய துறைமுக ஆணைய மசோதா: உங்கள் நண்பரிடம் இந்தியாவின் சொத்தை கொடுக்க போகிறீர்களா? – காங்கிரஸ் கேள்வி

மேற்கு வங்க பாஜகவின் செய்தி தொடர்பாளர், சாமிக் பட்டாச்சார்யா, “மாநில அரசின் கட்டுப்பாட்டில் காவல்துறை இருக்கும் பட்சத்தில், இது ஜோடிக்கப்பட்ட வழக்காக கூட இருக்கலாம்” எனக் கூறியுள்ளார்.

‘பிரதமர் கருணையைப் பற்றி பாடம் எடுப்பதை விடுத்து, போராடும் விவசாயிகளுக்கு கருணை காட்டுங்கள்’ – திரிணாமூல்

இதுபற்றி திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் சந்திரிமா பட்டாச்சார்யா கூறுகையில், “மேற்குவங்கத்தில் இது போன்ற சம்பவங்கள் நடப்பதை எண்ணி வெட்கப்படுகிறேன். இதுதான் எங்கள் மாநிலத்தில் பாஜகவின் உண்மை முகம். முன்னதாக குழந்தைகள் கடத்தல் வழக்குகளில் பாஜகவினரின் பெயர்கள் அடிப்பட்டதை மறக்க முடியாது” என்று குறிப்பிட்டுள்ளதாக டைம்ஸ் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.

போதைப் பொருள் கடத்தல்: பாஜக இளைஞரணி மாநிலத் தலைவர் பமீலா கோஸ்வாமி கைது

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்