பாஜகவின் மதவெறி உலக அளவில் இந்தியாவின் மதிப்பையும் கெடுத்து விட்டது என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
முஹம்மது நபி குறித்து பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா அவதூறான கருத்து தெரிவித்திருந்தார். இதற்குப் பல பல வளைகுடா நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதன் பிறகு அவர் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக பாஜக கட்சி மேலிடம் தெரிவித்தது.
மேலும், பாஜகவின் டெல்லி மாநில ஊடக பிரிவுத் தலைவர் நவீன் ஜிண்டால், நபிகள்குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்து, பின்னர் நீக்கினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் மற்றும் ஆர்பாட்டங்கள் நடைபெற்றன. பின்னர் அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
உலக நாடுகளின் கண்டன்ங்களைத் தொடர்ந்து, அனைத்து மதங்களையும் மதிப்பதாகவும், எந்த ஒரு மதத்தையோ ஆளுமைகளையோ அவமதிப்பதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் பாஜக அறிக்கையை வெளியிட்டது.
இச்சம்பவம் குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, “உள்நாட்டில் பிளவுபட்ட இந்தியா, வெளிப்புறமாக பலவீனமாகிறது. பாஜகவின் வெட்கக்கேடான மதவெறி எங்களை தனிமைப்படுத்தியது மட்டுமின்றி, உலக அளவில் இந்தியாவின் மதிப்பையும் கெடுத்து விட்டது” என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஒன்றிய அரசின் முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம், “உள்நாட்டில் எழுந்த விமர்சனங்களால் அல்ல, சர்வதேச அளவில் ஏற்பட்ட பின்னடைவுதான் நபிகள் குறித்து சர்ச்சையான கருத்து தெரிவித்த இரண்டு நிர்வாகிகள் மீது பாஜக நடவடிக்கை எடுக்க காரணமாக அமைந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.
“நுபுர் ஷர்மாவும் நவீன் குமாரும் இஸ்லாமோஃபோபியாவை உருவாக்கியவர்கள் அல்ல. அவர்கள் ராஜாவை விட விசுவாசமாக இருக்க முயற்சி செய்தார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என்று ப.சிதம்பரம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
Source: theindianexpress
கடும் கோபத்தில் அரபு நாடுகள் ! பம்மும் பாஜக ! Nupur Sharma Comment on Prophet Muhammad
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.