பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என காணொளி வெளியிட்ட தென்காசி மாவட்ட பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.
பாஜகவை சேர்ந்த தென்காசி மாவட்ட விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு தலைவர் கிருஷ்ணன்(33) என்பவர் இருபிரிவினர் இடையே பிரச்சினையை தூண்டும் விதமாக அவதூறு வீடியோ ஒன்றை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார்.
இதுதொடர்பான காணொளியில் பேசியுள்ள கிருஷ்ணன், ”பெரியார் சிலைகளை அடித்து உடையுங்கள், சாணியை அபிஷேகம் செய்யுங்கள், செருப்பு மாலை அணியுங்கள்” என்று சர்ச்சைக்குறிய வகையில் பேசியிருந்தார். அந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, புளியங்குடியை சேர்ந்த திமுகவினர் காவல்துறையிடம் புகார் அளித்தனர்.
இதைத்தொடர்ந்து, புளியங்குடி காவல்துறையினர் கிருஷ்ணனை கைது செய்து இந்திய தண்டணை சட்டம் குற்ற எண் 316/ 22 பிரிவு 153(A), 505 (1) உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Source: News18
பெரியார்மேல கைய வச்சா நாங்க சும்மா விடமாட்டோம். | Public Opinion | Stunt Kanal kannan Controversy
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.