சமூகத்தை பிளவுபடுத்த பாஜக விரும்புகிறது என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
பீகார் அமைச்சரான இஸ்ரேல் அகமது மன்சூரி கயாவில் உள்ள கோயிலுக்குச் சென்றது தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ் குமார், “பாஜகவின் பிரிவினைவாத அரசியலால் இந்த சர்ச்சை எழுந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.
அலோபதி மருத்துவ முறையை பாபா ராம்தேவ் விமர்சிக்க தடை – உச்ச நீதிமன்றம் உத்தரவு
“அவர்கள் (பாஜக) இம்மாதிரியான பிரச்சினைகளை எழுப்பி சமூகத்தை பிளவுபடுத்த விரும்புகிறார்கள். அவர்களின் நோக்கம் என்ன? அவர்களின் அமைச்சர்கள் என்னுடன் கோவில்களுக்குச் செல்லவில்லையா” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவரான சையத் ஷாநவாஸ் ஹுசைன் பல இந்துக் கோயில்களுக்குச் சென்றுள்ளார் என்பதை பத்திரிகையாளர் சுட்டிக்காட்டியபோது அவர் அதை அமோதித்துள்ளார்.
இஸ்ரேல் அகமது மன்சூரி ஒரு பாஸ்மாண்டா இஸ்லாமியச் சமூகத்தைச் சேர்ந்தவர். இந்த வார தொடக்கத்தில் கயாவில் நடந்த சுற்றுப்பயணத்தின் போது விஷ்ணுபாத் கோவிலில் பிரார்த்தனை செய்துள்ளார்.
எண்டிடிவியின் பங்குகளை வாங்கிய அதானி குழுமம் – நடந்தது என்ன?
“சனாதன தர்மத்தைப் பின்பற்றுபவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்” என்று அந்த வளாகத்தில் இருந்த அறிவிப்புப் பலகையை மேற்கோள் காட்டி பாஜக தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
Source: newindianexpress
Kallakurichi Sakthi School students statement recorded in court – Sundharavalli | Ravikumar Sakthi
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.