மேற்கு வங்கத்தில் கடந்த பத்தாண்டுகளாக ஆட்சியில் இருக்கும் திரிணாமூல் காங்கிரசுக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையிலான வார்த்தைப் போர் வலுத்து வருகிறது
இன்னும் சில மாதங்களில் மேற்குவங்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் மேற்கு வங்கத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அமித்ஷாவின் மேற்கு வங்க பயணத்தின் போது திரிணாமூல் காங்கிரசின் முக்கிய தலைவருமான சுவேண்டு அதிகாரி உட்பட 35 தலைவர்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளனர்.
வேளாண் சட்டங்களால் பாதிக்கப்படுவோரின் சமூக பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் – ஐஎம்எஃப் எச்சரிக்கை
2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 18 இடங்களைக் கைபற்றியது. ஒன்பது திரிணாமூல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், ஒரு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர், ஒரு மார்க்சிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் பாஜகவில் இணைந்துள்ளனர்.
இந்நிலையில், பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா 41 திரிணாமூல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவுடன் தொடர்பில் இருப்பதாகவும், விரைவில் பாஜகவில் இணைய இருப்பதாகவும் தெரிவித்துள்ளாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
விமான நிலைய தனியார் மயமாக்கலில் அதானி ஆதிக்கம் – மத்திய அரசு உடந்தையா?
”ஆனால் யாரை கட்சியில் அனுமதிக்க வேண்டும், யாரை அனுமதிக்கக்கூடாது என்பதை நாங்கள் தீர்மானித்துக் கொண்டிருக்கிறோம்” என்றும் அவர் கூறியுள்ளார். அவர்களை தற்போது பாஜகவில் இணைத்தால் மம்தா பானர்ஜியின் அரசாங்கம் கவிழ்ந்துவிடும் என்று அவர் மிரட்டல் விடுத்துள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள திரிணாமூல் காங்கிரசின் செய்தி தொடர்பாளர் குனால் கோஷ், மேற்கு வங்கத்தில் இருக்கும் பாஜகவின் 19 நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஏழு பேர் திரிணாமூல் காங்கிரசுடன் தொடர்பில் இருப்பதாக கூறியுள்ளார்.
விவசாயிகளுடன் இன்று 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை – துளியும் நம்பிக்கையில்லை என்று விவசாயிகள் கருத்து
சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த கலவரத்தை குறிப்பிட்டு பேசிய மம்தா பானர்ஜி ”பாஜக தேர்தலில் தோல்வியடையும் நாள் வரும்போது, ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் எப்படி நடந்துகொண்டார்களோ, அதே போல் தான் பாஜக கட்சிக்காரர்களும், அதன் அபிமானிகளும் நடந்துக்கொள்வார்கள்.” என்று விமர்சித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.