Aran Sei

டி.ஆர்.எஸ் எம்.எல்.ஏ.க்களுடன் பாஜக பேரம் பேச முயற்சி? – தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் வெளியிட்ட காணொளியால் பரபரப்பு

ங்களது சட்டமன்ற உறுப்பினர்களுடன் பாஜக பேரம் பேச முயற்சி செய்ததாகத் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் வெளியிட்ட காணொளியால் தெலங்கானா அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தெலங்கானாவின் டிஆர்எஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை பாஜகவினர் விலைக்கு வாங்க முயன்றதாக கூறிய அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், அது குறித்த காணொளிகளை வெளியிட்டுள்ளார்.

டிஆர்எஸ் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயன்ற புகார் – கைது செய்யப்பட்ட 3 பேர் விடுவிப்பு

தெலங்கானாவில் டி.ஆர்.எஸ் சட்டமன்ற உறுப்பினர்களான ரேகா காந்த ராவ், குவ்வாலா பாலராஜு, பீரம் ஹர்ஷ்வர்தன் ரெட்டி, பைலட் ரோஹித் ரெட்டி ஆகிய 4 பேருடன் பாஜகவினர் பேரம் பேச முயன்றதாக கூறப்பட்டது. அந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் பணம் வழங்குவதன் மூலம், அவர்களை கட்சி மாறச் செய்து டிஆர்எஸ் அரசை கவிழ்க்க பாஜக முயற்சிப்பதாக தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் குற்றம் சாட்டினார்.

இந்த குற்றச்சாட்டுகளை பாஜக மறுத்துள்ள நிலையில், ஆதாரங்களாக சில காணொளிகளை முதலமைச்சர் சந்திரசேகர ராவ் வெளியிட்டுள்ளார். இந்த விவகாரம் தெலங்கானா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source : indianexpress

பாஜக சங்கி சூர்யாவின் ரவுடித்தனம் | புணர்தலா? ரெட்டியின் ஆபாச ட்வீட் | Aransei Roast | BJP

டி.ஆர்.எஸ் எம்.எல்.ஏ.க்களுடன் பாஜக பேரம் பேச முயற்சி? – தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் வெளியிட்ட காணொளியால் பரபரப்பு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்