அயோத்தி விவகாரம் தீர்க்கப்பட்ட பின்னரும் கூட நாடு முழுவதும் புதிய வகுப்புவாத பிரச்சினைகளை உருவாக்க பாஜக முயற்சிக்கிறது என்று தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதி பிரச்சினையை எழுப்புவதும் அத்தகைய ஒரு முயற்சியாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க பாஜக முயற்சிக்கிறது. வகுப்புவாத சக்திகள் பாஜக ஆட்சியின் கீழ் சுதந்திரமாக இயங்குகின்றன. இது போன்ற வகுப்புவாத சக்திகள் நாட்டின் இருப்புக்கே அச்சுறுத்தலாக உள்ளன, “என்று நேற்று கொச்சியில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
“தி காஷ்மீர் பைல்ஸ் படமும் இத்தகைய ஒரு வகுப்புவாத முயற்சியாகும். இப்படத்தின் குழுவினர் ஆளும் பாஜக கட்சியுடன் தொடர்பில் உள்ளனர். காஷ்மீரில் இந்துக்களையும் இஸ்லாமியர்களையும் பிளவுபடுத்தும் தீய முயற்சிகளுக்கு ஒன்றிய அரசு உதவுகிறது” என்று அவர் கூறியுள்ளார்.
பாஜகவின் மதவெறி அரசியலை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள் – தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
“அயோத்தி பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டால் நாட்டில் அமைதி நிலவும் என்று பாஜக முன்பு மக்களிடம் கூறியிருந்தது. ஆனால் இப்போது வாரணாசியில் ஒரு புதிய பிரச்சினையை உருவாக்க பாஜக முயற்சிக்கிறது. சிறுபான்மையினரை துன்புறுத்துவதற்கென்றே பிரச்சினைகளை உருவாக்குவதுதான் பாஜகவின் நோக்கமாகும். அவர்கள் வேண்டுமென்றே எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளிலிருந்து பொதுமக்களின் கவனத்தைத் திசைதிருப்புகிறார்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஒத்த எண்ணம் கொண்ட மதச்சார்பற்ற கட்சிகளுடன் பாஜகவிற்கு எதிரான போராட்டத்தை தேசியவாத காங்கிரஸ் முன்னெடுக்கும் என்று கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
Source : newindianexpress
இளவரசு கிட்ட 20 அறை வாங்குனேன் Bigg Boss Suresh Chakravarthy Interview
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.