Aran Sei

2020-2021 இல் ரூ.752 கோடி வருமானத்துடன் பாஜக முதலிடம் : ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் தகவல்

2020-2021 ஆம் ஆண்டில் மற்ற அனைத்து தேசிய கட்சிகளையும் விட பாஜக மிக அதிகமாக வருமானம் ஈட்டி அதிகமாக செலவு செய்துள்ளது என்று ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது

இந்தியாவில் உள்ள 8 தேசிய கட்சிகளின் வருமானத்தில் கிட்டத்தட்ட 54 விழுக்காடு பாஜகவுக்குதான் செல்கிறது.

4,847 கோடி சொத்து மதிப்புடன் இந்தியாவின் பணக்கார கட்சியாக மாறிய பாஜக – ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் தகவல்

பாஜக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, தேசியவாத காங்கிரஸ் மற்றும் தேசிய மக்கள் கட்சி ஆகியவை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்த வருடாந்திர தணிக்கை அறிக்கைகளை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் பகுப்பாய்வு செய்தது.

அதில், அறிவிக்கப்பட்ட மொத்த வருமானமான 1,373.78 கோடி ரூபாயில், பாஜகவுக்கு ரூ.752.33 கோடியும், காங்கிரஸ் ரூ.285.76 கோடியுடன் இரண்டாவது இடத்திலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ரூ.171.04 கோடியுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் ரூ.74.41 கோடி வருமானத்துடன் நான்காம் இடத்திலும், பகுஜன் சமாஜ் கட்சி ரூ.52.46 கோடி வருமானத்துடன் ஐந்தாம் இடத்திலும், தேசியவாத காங்கிரஸ் ரூ.34.92 கோடி வருமானத்துடன் ஆறாம் இடத்திலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ரூ.2.12 கோடி வருமானத்துடன் ஏழாம் இடத்திலும், தேசிய மக்கள் கட்சி ரூ.69 லட்சம் வருமானத்துடன் எட்டாம் இடத்திலும் உள்ளது.

கார்ப்பரேட்களிடமிருந்து 720 கோடியை நன்கொடையாக பெற்ற பாஜக -ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் தகவல்

பாஜக தனது மொத்த வருமானத்தில் 82 விழுக்காட்டை செலவு செய்துள்ளது. காங்கிரஸ் தனது மொத்த வருமானத்தில் 73.14 விழுக்காட்டை செலவழித்துள்ளது. திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் செலவு அதன் வருவாயை விட 78.10 விழுக்காடு அதிகமாகும்.

தன்னார்வ நன்கொடைகள்தான் பாஜகவின் முக்கிய வருவாய் ஆதாரம் ஆகும். அதே நேரத்தில் காங்கிரஸ் அதன் வருமானத்தில் பெரும்பகுதியை கூப்பன்கள் வழங்குவதன் மூலமும், பகுஜன் சமாஜ் கட்சி வங்கி வட்டியிலிருந்தும் பெற்றது என்று அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

Source : the hindu

இந்திய இளைஞர்களை கூலிப்படையாக மாற்றும் Agnipath | Maruthaiyan Interview

2020-2021 இல் ரூ.752 கோடி வருமானத்துடன் பாஜக முதலிடம் : ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் தகவல்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்