கத்தார், சவுதி அரேபியா, பஹ்ரைன் ஆகிய நாடுகளில் எதிர்ப்பு கிளம்பியதால்தான் நுபுர் சர்மாவுக்கு எதிராக பாஜக நடவடிக்கை எடுத்தது என்று ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.
நபிகள் நாயகம் பற்றி நுபுர் ஷர்மா அவதூறாக பேசிய 10 நாட்களுக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி அவரை இடைநீக்கம் செய்யச் சொல்லியுள்ளார். இந்த பிரச்சினையை நாங்கள் எழுப்பியபோது அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கத்தார், சவுதி அரேபியா, பஹ்ரைன் ஆகிய நாடுகளில் எதிர்ப்பு உருவானபோதுதான் அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்” என்று அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.
சிறுபான்மையினருக்கு எதிரான ஆத்திரமூட்டும் கருத்துக்களைத் தொடர்ந்து பாஜக தனது செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மாவை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை இடைநீக்கம் செய்தது.
இந்நிலையில் நுபுர் ஷர்மாவை இடைநீக்கம் செய்வதில் ஏன் இந்த தாமதம் என்று ஓவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.
57 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு இந்தியாவில் சிறுபான்மையினர் மீதான திட்டமிட்ட துன்புறுத்தலுக்கு எதிராக கவலை தெரிவித்துள்ளது.
நபிகள் நாயகம் பற்றிய அவதூறு கருத்து: நுபுர் சர்மாவுக்கு கங்கனா ரனாவத் ஆதரவு
இந்நிலையில், சிறுபான்மையினருக்கு எதிராக ட்விட்டரில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளதாக கத்தார் மற்றும் குவைத் நாட்டு அரசிடம் இந்தியா தெரிவித்துள்ளது.
கடந்த மே 28 அன்று தொலைக்காட்சி செய்தி விவாதத்தின்போது முகமது நபிக்கு எதிராக ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாக நூபுர் ஷர்மா மீது மும்பை காவல்துறை வழக்குப் பதிவு செய்தது.
வருகின்ற ஜூன் 22-ம் தேதி விசாரணை அதிகாரி முன் வாக்குமூலம் கொடுக்க ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளதாக தானே காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Source : NDTV
நாடகமாடும் பாஜக, நடிக்கும் அரேபிய நாடுகள் | Prophet Muhammad
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.