Aran Sei

பத்திரிகையாளர்களை அச்சுறுத்தும் பாஜக அண்ணாமலை – மே 17, மக்கள் நீதி மய்யம் கண்டனம்

த்திரிகையாளர்களிடம் மோசமாக நடந்துகொண்ட பாஜக தலைவர் அண்ணாமாலைக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் இயக்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள என்று மக்கள் நீதி மய்யம்,   “தமிழகத்தில் அண்மைக்காலமாக பத்திரிகையாளர்களை சிறுமைப்படுத்துவதும், அச்சுறுத்துவதும் அடிக்கடி நிகழ்கிறது. பத்திரிகையாளர்களின் கேள்விகள் தர்மசங்கடம் அளித்தால் அவற்றைத் தவிர்க்கலாமே தவிர, செய்தியாளரை அவமதிப்பது அழகல்ல. ஊடகவியலாளர்கள் மரியாதையோடு நடத்தப்படவேண்டியது அவசியம்” என்று தெரிவித்துள்ளது.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் நடவடிக்கை குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கருத்துப் பதிவிட்டுள்ளார். அதில், ஊடகவியலாளர்களை இழிவுபடுத்தும் பாஜகவினரை ஊடக நிர்வாகங்கள் கேள்வி எழுப்பியதில்லை. மாறாக பாஜகவுக்கு முன்னுரிமையளித்து வளர்க்கவே செய்கின்றனர்.

ஊடகவியலாளரை அவமானப்படுத்தும்  அண்ணாமலைக்கு ஊடகத்தை எதிர்கொள்ளும் முதிர்ச்சியும், தெளிவுமில்லை. அவர் தலைவர் மோடி ஊடகத்தை சந்தித்ததுமில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் பாஜகவ கேள்வி கேட்க கூடாதா? Piyush Manush | Annamalai vs Reporters

பத்திரிகையாளர்களை அச்சுறுத்தும் பாஜக அண்ணாமலை – மே 17, மக்கள் நீதி மய்யம் கண்டனம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்