முஹம்மது நபிகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா பேசியதற்கு எதிர்ப்பு அரபு நாடுகளில் பாஜக அரசுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.
கடந்த வாரம் டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் கியான்வாபு மசூதி தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் நுபு சர்மா, முஹம்மது நபிகள்குறித்த அவதூறான கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களும் ஆர்பாட்டங்களும் நடைபெற்று வந்தது. கான்பூரில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில், காவல்துறையைச்ச் சார்ந்த 13 பேர் உள்ளிட்ட 40க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
இது தொடர்பாக 1000 பேர்மீது மூன்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, 36 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாஜக செய்தித் தொடர்பாளரின் கருத்திற்கு சர்வதேச அளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சவுதி அரேபியா, குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில், மோடி மற்றும் இந்தியாவிற்கு எதிராக எதிர்ப்பு கிளம்புள்ளது.
மோடியை கடுமையாக விமர்சித்து அந்நாட்டு பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியான நிலையில், இந்தியாவை புறக்கணிக்க வேண்டும் என்று பலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். மேலும், இந்திய தொழிலாளர்களை பணியில் இருந்து நீக்குவதாகவும் பலர் ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.
’இதெல்லாம் ஆர்எஸ்எஸ் தந்திரம்’: மோகன் பகவத்தை விமர்சித்த ஓவைசி
இந்நிலையில் முஹம்மது நபிகுறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறியதற்காக நுபுர் சர்மா, நவீன் ஜிண்டால் ஆகியோரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து இடைக்கால நீக்கம் செய்து பாஜக உத்தரவிட்டுள்ளது.
மேலும், கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் அருண் சிங் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், பாரதிய ஜனதா கட்சி அனைத்து மதங்களையும் மதிக்கிறது, எந்த மதத்தினரையும் இழிவுபடுத்துவதை பாஜக கடுமையாக கண்டிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Cook With Comali பார்த்தா குழந்தை பிறக்குமா? Dr Shalini Interview | Venkatesh Bhat Troll | Pregnancy
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.