2024-ல் ஒன்றியத்தில் இருக்கும் பாஜக ஆட்சி 2024 ஆம் ஆண்டு வேரோடு பிடுங்கி எறியப்படும்” என்று ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சியின் மூத்த தலைவர் லாலன் சிங் தெரிவித்துள்ளார். 2019-ம் ஆண்டு மூன்று மாநிலங்களில் பாஜக அல்லாத கட்சிகள் வெற்றி பெற்றதால் 40 மக்களவைத் தொகுதிகளை பாஜக இழக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய லாலன் சிங், “ பீகார், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கத்தில் 2019 ஆம் ஆண்டு பாஜக அல்லாத கட்சிகள் வெற்றி பெற்றதில் இருந்து பாஜக 40 மக்களவைத் தொகுதிகளை இழக்கும்” குறிப்பிட்டுள்ளார்.
“2024 தேர்தலில் அவர்களை (பாஜக) வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் என்று லாலு ஜியிடம் ஆசிர்வாதம் வாங்கினேன். அவர்கள் 303 இடங்களில் வெற்றி பெற்றதால் அவர்களின் எண்ணிக்கையை வெறும் 40 இடங்களுக்கு குறைக்க இலக்கு வைத்துள்ளோம். மக்களவையில் பெரும்பான்மை மதிப்பெண் 272.” என்று லாலன் சிங் கூறியுள்ளார்.
பீகார், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மூன்று இடங்களில் மட்டும் அவர்களின் எண்ணிக்கையில் 40 இடங்கள் குறைக்க முடியும்,” என்று ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சியின் மூத்த தலைவர் லாலன் சிங் தெரிவித்துள்ளார்.
2019 இல் நடைபெற்ற மக்களவை தேர்தலில் இந்த மூன்று மாநிலங்கள் பாஜக 47 இடங்களில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Source: ndtv
பெரியார் பிம்பத்தை யாராலும் தகர்க்க முடியாது I Sathya Prabhu Interview I Kallakurichi Sakthi School
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.