Aran Sei

ஹிட்லர், முசோலினி ஆட்சியைவிட பாஜக ஆட்சி மோசமானது – மம்தா பானர்ஜி

Credit : The New Indian Express

ஹிட்லர், முசோலினி ஆட்சியைவிட பாஜக ஆட்சி மோசமானது  என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மாநில விவகாரங்களில் தலையிட மத்திய புலனாய்வு நிறுவனங்களை ஒன்றிய அரசு பயன்படுத்துகிறது என்று குற்றம் சாட்டிய மம்தா பானர்ஜி, நாட்டின் கூட்டாட்சி அமைப்பை பாஜக தலைமையிலான ஒன்றி அரசு புல்டோசர் கொண்டு இடிக்கிறது என்று கூறியுள்ளார்.

புலனாய்வு அமைப்புகளின் உதவியுடன் துக்ளக் ஆட்சி நடத்துகிறது ஒன்றிய அரசு- மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

கொல்கத்தாவில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “அடால்ஃப் ஹிட்லர், பெனிட்டோ முசோலினி ஆட்சியை விட பாஜக ஆட்சி மோசமானது” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஜனநாயகத்தை பாதுகாக்க மத்திய அமைப்புகளுக்கு “சுயாட்சி வழங்கப்பட வேண்டும்” என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

பாரதிய கிசான் யூனியனின் ‘ஹர ஹர மகாதேவ், அல்லாஹு அக்பர்’ முழக்கம்: இந்து-இஸ்லாமியர் ஒற்றுமைக்கு வழிவகுத்த பாபா குலாம் முகமது ஜௌலா

முன்னதாக, சில அரசு அமைப்புகளின் உதவியுடன் பாஜக ஒன்றியத்தில் துக்ளக் ஆட்சி நடத்தி வருகிறது. அரசியல் கணக்கை தீர்த்துக் கொள்வதற்காக ஒன்றிய அரசின் புலனாய்வு  நிறுவனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. துக்ளக் ஆட்சியால் திரிணமூல் காங்கிரஸ் கட்சியை தடுத்து நிறுத்திவிட முடியாது என்று ம்ம்தா பானர்ஜி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Source: NDTV

Savukku Shankar Arrest ஆக வாய்ப்பே கிடையாது Piyush Manush Interview

ஹிட்லர், முசோலினி ஆட்சியைவிட பாஜக ஆட்சி மோசமானது – மம்தா பானர்ஜி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்