இந்தியத் துணைக்கண்டத்தில் சமூக நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தல் வந்தால் பாஜகதான் பொறுப்பேற்க வேண்டும் என்று சிவசேனா கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் எல்லாம் நன்றாக இருந்தது, ஆனால் பாஜகவின் செய்தித் தொடர்பாளர் இரு மதத்தினரிடையே மோதலை ஏற்படுத்த விரும்புகிறார். நாட்டில் ஏதேனும் நடந்தால் அதற்கு பாஜக தான் பொறுப்பு, நாங்கள் எங்கள் வேலையை செய்து கொண்டிருக்கிறோம் என்று அவர் கூறியுள்ளார்.
நபிகள் நாயகம் குறித்து பாஜக தலைவர்கள் கூறிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இதனால், குஜராத், உத்தரபிரதேசம், மும்பை மற்றும் டெல்லியில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்படும் என அல்கொய்தா மிரட்டல் விடுத்துள்ளது. “நமது நபியின் கண்ணியத்திற்காகப் போராடுவோம்” என்று சஞ்சய் ராவத் குறிப்பிட்டுள்ளார்.
”டெல்லி, மும்பாய், உ.பி மற்றும் குஜராத்தில் தங்கள் முடிவுக்கு காவி பயங்கரவாதிகள் காத்திருக்க வேண்டும்” என்று அந்த மிரட்டல் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, விமான நிலையங்கள், மெட்ரோ, ரயில் நிலையங்கள், சந்தைப் பகுதிகள் போன்ற இடங்களில் கண்காணிப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது.
Source: thenewindianexpress
படுக்கையறையை எட்டிப்பார்க்கும் ஆபாச அண்டா Bayilvan Ranganathan
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.